07/11/2025 | தினமலர் ஆன்மீக மலர் குறுக்கெழுத்து போட்டி | dinamalar aanmeega malar kurukeluthu potti
Автор: sahothayam
Загружено: 2025-11-06
Просмотров: 7615
Описание:
அக்டோபர் 31, 2025 - ஆன்மிக குறுக்கெழுத்து புதிர் வெற்றி பெற்றவர் விபரம் பெற கீழ் காணும் லிங்கை சொடுக்கவும்.
https://drive.google.com/file/d/1j-Yj...
ஆன்மீக குறுக்கெழுத்து புதிர் | நவம்பர் 07, 2025 | வெள்ளி | தினமலர் - ஆன்மீக மலர் | Aanmeega Crossword Puzzle | November 07, 2025 | Dinamalar Aanmeega Malar
இடமிருந்து வலம்
1. ----யில் முதிர்ந்த பழம்; பக்தி பசியோடு வருவோர்க்கு ஞானப்பழம் என்பது பிரபல பாடல் வரி (8)
6. ஒளியைக் கொடுக்கும் சூரியனின் மற்றொரு பெயர் (5)
8. பாண்டு, திருதராஷ்டிரனின் தம்பி. இவர் அறநெறி தவறாதவர் (4)
9. அர்ச்சகரை இப்படியும் அழைப்பர் (3)
11. ---- சிறந்த கோயிலுமில்லை (3)
12. காவிரி மற்றும் ----- ஆகிய ஆறுகளால் சூழப்பட்ட தீவில் இருக்கிறது ஸ்ரீரங்கம் பெருமாள் கோயில் (5)
13. ராவணனின் ---- சூர்ப்பனகை (3)
15. அசுரகுரு ----ராச்சாரியார் (3)
16. தனது வினாக்கள் அனைத்திற்கும் சரியாக ----யளித்த தர்மரைக்கண்டு மகிழ்ந்தான் யட்சன். (2)
17. பிரயாக்ராஜ் என்ற தலத்தில் இந்த இரு நதிகளும் சங்கமமாவதை கண்கூடாகப் பார்க்கலாம். (3,3)
மேலிருந்து கீழ்
1. 'ஓம் சரவண---' என்பது முருகன் குறித்த மந்திரம் (2)
2. கண்ணப்ப நாயனாரின் இயற்பெயர் (4)
3. ----- கந்தர் என்பது சிவ பார்வதியோடு முருகனும் காட்சி தரும் திருவடிவம் (3)
4. இந்தப் படகோட்டியை தனது மற்றொரு சகோதரனாகவே ஏற்று கொண்டார் ராமபிரான் (3)
5. ராமரின் வனவாசத்தின்போது பரதன் அவரிடமிருந்து பெற்று சென்றவை (5)
6. பாஞ்சால நாட்டின் இளவரசி என்பதால் திரவுபதி இப்படியும் அழைக்கப்பட்டாள் (4)
7. மகாராஷ்டிரத்தில் ருக்மணியை இப்படியும் அழைப்பர் (4)
10. சிதம்பரத்தில் --- காலைத்தூக்கி நடனம் ஆடுகிறார் சிவபெருமான் (3)
11. முனிவர்கள் நடத்திய யாகத்தைக் காக்கச் சென்ற போது ராமபிரான் வதம் செய்த அரக்கி (3)
12. 'சிங்கார வேலனே தேவா' என்ற பாடல் இடம்பெற்ற திரைப்படம் ---- சலங்கை. (4)
13. முருகன் வள்ளியை மணம் புரிந்த தலம் சுருக்கமாக (3)
14. அபிராமி அம்பிகை அருள் புரிவது திருக்----யூரில். (2)
16.'வேலுண்டு ---- இல்லை. மயில் உண்டு பயமில்லை'. (2)
#sahothayam #dinamalar #crossword #சகோதயம்
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: