ycliper

Популярное

Музыка Кино и Анимация Автомобили Животные Спорт Путешествия Игры Юмор

Интересные видео

2025 Сериалы Трейлеры Новости Как сделать Видеоуроки Diy своими руками

Топ запросов

смотреть а4 schoolboy runaway турецкий сериал смотреть мультфильмы эдисон
Скачать

பரமகுரு நாத (திருப்புகழ்-515)

Автор: INGERSOL

Загружено: 2020-09-18

Просмотров: 100784

Описание: மேலும் பல படைப்புகள் உருவாக்க உதவுங்கள்

ACCOUNT NAME - INGERSOL SELVARAJ
ACCOUNT NUMBER - 602701518901
BANK - ICICI BANK LTD
BRANCH - MAYILADUTHURAI MAHADHANA ATRT
IFSC CODE - ICIC0001912
CITY - MAYURAM (MAYILADUTHURAI)
DISTRICT - NAGAPATTINAM
STATE - TAMIL NADU
MICR CODE - 609229005
BRANCH CODE - 001912
ADDRESS - ICICI BANK LTD, RMS ARCADE, NEW NO. 54, MAHADHANA STREET, MAYILADUTHURAI 609001, TAMIL NADU

நன்றி - இங்கர்சால்
.
இராகம் – மத்யமாவதி
இசையமைத்துப் பாடியவர் - பாண்டிச்சேரி ப.சம்பந்தம் குருக்கள்
யாழிசை - பண்ணப்பட்டு S.வெங்கடேசன்
முழவிசை - சென்னை K.மாதேஷ்வரன்
முகர்சிங் - சிதம்பரம் S.ராஜேந்திரன்
ஒளிப்பதிவு, எடிட்டிங் மற்றும் இயக்கம் - ரோஹித் சுப்பிரமணியனின்
டேடிரீமர்ஸ் கிரியேஷன்ஸ், தயாரிப்பு - வள்ளுவர் வள்ளலார் வட்டம்

பரமகுரு நாத கருணையுப தேச
பதவிதரு ஞானப் பெருமாள்காண்

பகலிரவி லாத ஒளிவெளியில் மேன்மை
பகருமதி காரப் பெருமாள்காண்

திருவளரு நீதி தினமனொக ராதி
செகபதியை யாளப் பெருமாள்காண்

செகதலமும் வானு மருவையவை பூத
தெரிசனைசி வாயப் பெருமாள்காண்

ஒருபொருள தாகி அருவிடையை யூரு
முமைதன்மண வாளப் பெருமாள்காண்

உகமுடிவு கால மிறுதிகளி லாத
உறுதியநு பூதிப் பெருமாள்காண்

கருவுதனி லூறு மருவினைகள் மாய
கலவிபுகு தாமெய்ப் பெருமாள்காண்

கனகசபை மேவி அனவரத மாடு
கடவுள்செக சோதிப் பெருமாளே

பதவுரை

கனகசபை மேவி அனவரதம் ஆடு கடவுள் --- பொன்னம்பலத்தில் எழுந்தருளி அனவரதமும் ஆனந்தத் திருநடனம் புரிகின்ற கடவுளே!

சோதிப் பெருமாளே --- ஓளி வடிவமானவரே! பெருமையில் மிக்கவரே!

பரம குருநாத, கருணை உபதேச --- மேலான குருநாதரும், கருணையுடன் உபதேசம் புரிபவரும்,

பதவி தரு ஞானப் பெருமாள்காண் --- மேலான பதங்களைத் தந்து அருளுபவருமான பெருமையில் மிக்கவர் தேவரீரே தான்.

பகல் இரவு இலாத ஒளி வெளியில் --- போக்கும் வரவும், பகலும் இரவும், நினைப்பும் மறப்பும், சகல கேவலமும் அற்றதான ஞான ஒளிவீசும் பெருவெளியில்

மேன்மை பகரும் அதிகாரப் பெருமாள் காண் --- மேலான உண்மைப் பொருளை விளக்கும் அதிகாரம் கொண்டுள்ள பெருமையில் மிக்கவர் தேவரீரே தான்.

திருவளரும் நீதி, தின மனொகர, ஆதி --- முக்திச் செல்வத்தை வளர்க்கின்ற நீதியே வடிவானவரும், விரும்பப் படுபவரும், ஆதி முதற்பொருளும்,

செகபதியை ஆள் அப் பெருமாள் காண் --- உலகிலுள்ள மன்னர்களை எல்லாம் ஆள்கின்றவரும் ஆகிய பெருமையில் மிக்கவர் தேவரீரே தான்.

செகதலமும் வானு மருவு ஐ அவை பூத --- மண்ணும், விண்ணும், அவற்றில் பொருந்தியுள்ள ஐந்து பூதங்களிலும் கலந்து விளங்கி

தெரிசனை சிவாயப் பெருமாள் காண் --- தரிசனம் தரும் சிவாயநம என்னும் திருவைந்தெழுத்துப் பொருளான பெருமையில் மிக்கவர் தேவரீரே தான்.

ஒரு பொருள் அதாகி அரு விடையை ஊரும் --- ஒப்பற்ற பரம்பொருளாகி அருமையான விடையின் மீது ஊர்ந்து வரும்,

உமை தன் மணவாளப் பெருமாள் காண் --- பார்வதியின் மணவாளர் ஆகிய பெருமையில் மிக்கவர் தேவரீரே தான்.

உக முடிவு --- ஊழிக் காலமும்,

காலம் இறுதிகள் இலாத --- கடந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம் என்ற ஏதும் இல்லாத

உறுதி அநுபூதிப் பெருமாள் காண் --- உயிர்களுக்கு நன்மையைத் தரும் சிவாநுபூதி அருளும் பெருமையில் மிக்கவர் தேவரீரே தான்.

கருவுதனில் ஊறும் அருவினைகள் மாய --- கருக்குழியில் இருந்தே ஊறி வருகின்ற, மீளவும் கருக்குழியிலேயே வீழ்த்துகின்ற கொடிய வினைகள் அழிய

கலவி புகுதா மெய்ப் பெருமாள் காண் --- மீண்டும் என்னை மாயப் பிரபஞ்ச சேர்க்கையில் புகுத்தாத பெருமையில் மிக்கவர் தேவரீரே தான்.


பொழிப்புரை


பொன்னம்பலத்தில் எழுந்தருளி அனவரதமும் ஆனந்தத் திருநடனம் புரிகின்ற அமுபலவாணப் பெருமாளும், உலக சோதியுமான பெருமையில் மிக்கவரே!

மேலான குருநாதரும், கருணையுடன் உபதேசம் புரிபவரும், மேலான பதங்களைத் தந்து அருளுபவருமான பெருமையில் மிக்கவர் தேவரீரே தான்.

போக்கும் வரவும், பகலும் இரவும், நினைப்பும் மறப்பும், சகலகேவலமும் அற்றதான ஞான ஒளிவீசும் பெருவெளியில் மேலான உண்மைப் பொருளை விளக்கும் அதிகாரம் கொண்டுள்ள பெருமையில் மிக்கவர் தேவரீரே தான்.

முக்திச் செல்வத்தை வளர்க்கின்ற நீதியே வடிவானவரும், விரும்பப் படுபவரும், ஆதி முதற்பொருளும், உலகிலுள்ள மன்னர்களை எல்லாம் ஆள்கின்றவரும் ஆகிய பெருமையில் மிக்கவர் தேவரீரே தான்.

மண்ணும், விண்ணும், அவற்றில் பொருந்தியுள்ள ஐந்து பூதங்களிலும் கலந்து விளங்கி தரிசனம் தரும் சிவாயநம என்னும் திருவைந்தெழுத்துப் பொருளான பெருமையில் மிக்கவர் தேவரீரே தான்.

ஒப்பற்ற பரம்பொருளாகி அருமையான விடையின் மீது ஊர்ந்து வரும், பார்வதியின் மணவாளர் ஆகிய பெருமையில் மிக்கவர் தேவரீரே தான்.

ஊழிக் காலமும், கடந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம் என்ற ஏதும் இல்லாததும், உயிர்களுக்கு நன்மையைத் தருவதும் ஆன சிவாநுபூதி அருளும் பெருமையில் மிக்கவர் தேவரீரே தான்.

கருக்குழியில் இருந்தே ஊறி வருகின்ற, மீளவும் கருக்குழியிலேயே வீழ்த்துகின்ற கொடிய வினைகள் அழிய, மீண்டும் என்னை மாயப் பிரபஞ்ச சேர்க்கையில் புகுத்தாத பெருமையில் மிக்கவர் தேவரீரே தான்.

Не удается загрузить Youtube-плеер. Проверьте блокировку Youtube в вашей сети.
Повторяем попытку...
பரமகுரு நாத (திருப்புகழ்-515)

Поделиться в:

Доступные форматы для скачивания:

Скачать видео

  • Информация по загрузке:

Скачать аудио

Похожие видео

அகர முதலென (திருப்புகழ் - 1124)

அகர முதலென (திருப்புகழ் - 1124)

Джем – பரமகுரு நாத (திருப்புகழ்-515)

Джем – பரமகுரு நாத (திருப்புகழ்-515)

Parama Gurunatha Naatha | Chidambaram Thiruppugazh | Arungirinathar | Tamil Thiruppugazh.

Parama Gurunatha Naatha | Chidambaram Thiruppugazh | Arungirinathar | Tamil Thiruppugazh.

இசைத்தென்றல் ப. சம்பந்தம் குருக்கள் திருப்புகழ் தேனிசை - பழனி முத்தமிழ் முருகன் மாநாடு | திருவையாறு

இசைத்தென்றல் ப. சம்பந்தம் குருக்கள் திருப்புகழ் தேனிசை - பழனி முத்தமிழ் முருகன் மாநாடு | திருவையாறு

தேடுகிறேன்...முருகா உன்னையே! Thedugiren | Soulful Tamil Murugan Song | Finding God Within | 2025

தேடுகிறேன்...முருகா உன்னையே! Thedugiren | Soulful Tamil Murugan Song | Finding God Within | 2025

தோல் எலும்பு (திருப்புகழ் - 715)

தோல் எலும்பு (திருப்புகழ் - 715)

ஞாயிறு இன்று கேட்க வேண்டிய உலகினை காத்திடும் சூரிய பகவானே பாடல் | Suryabagavan | Magizhan TV Bakthi

ஞாயிறு இன்று கேட்க வேண்டிய உலகினை காத்திடும் சூரிய பகவானே பாடல் | Suryabagavan | Magizhan TV Bakthi

பழுது அற ஓதி (திருப்புகழ் - 1174)

பழுது அற ஓதி (திருப்புகழ் - 1174)

Cennikkula nagar vasan | Murugan song | Kavadi Sindhu - Senni Kula Nagar | By Sandeep Narayan

Cennikkula nagar vasan | Murugan song | Kavadi Sindhu - Senni Kula Nagar | By Sandeep Narayan

இயலிசையில் உசித (திருப்புகழ் - 31)

இயலிசையில் உசித (திருப்புகழ் - 31)

Simmanthu - Sundharar Thevaram | சிம்மாந்து - Sundarar Sortamil  | Solar Sai | Bakthi TV | Tamil

Simmanthu - Sundharar Thevaram | சிம்மாந்து - Sundarar Sortamil | Solar Sai | Bakthi TV | Tamil

இயலிசை - பாகம் 1 - திருப்புகழ்

இயலிசை - பாகம் 1 - திருப்புகழ்

புவிக்குன் பாதம் (1179)

புவிக்குன் பாதம் (1179)

Paramagurunadha - Thiruppugazh  | பரமகுரு நாதர் திருப்புகழ் | Murugammaiyar Story

Paramagurunadha - Thiruppugazh | பரமகுரு நாதர் திருப்புகழ் | Murugammaiyar Story

நாள் என் செயும் | நீயல்லால் தெய்வம் இல்லை |

நாள் என் செயும் | நீயல்லால் தெய்வம் இல்லை | "Padmashri" Dr. Sirkazhi S. Govindarajan |Live Recording

அடல்வடி வேல்கள் | Adal vadivelgal | திருப்புகழ் 728 | Thirupugal 728 #kaavaditv #திருப்புகழ் #tamil

அடல்வடி வேல்கள் | Adal vadivelgal | திருப்புகழ் 728 | Thirupugal 728 #kaavaditv #திருப்புகழ் #tamil

Parama Gurunaatha - Guru Purnima 2021

Parama Gurunaatha - Guru Purnima 2021

காதலாகிக் கசிந்துகண்ணீர் மல்கி

காதலாகிக் கசிந்துகண்ணீர் மல்கி

Nadavindu - Thiruppugal | Lyrical Video |Arunagirinathar | L Krishnan | Chithra

Nadavindu - Thiruppugal | Lyrical Video |Arunagirinathar | L Krishnan | Chithra

அறுபடை வீடு திருப்புகழ் இசை  - சம்பந்தம் குருக்கள் | Echoes of Devotion: Thiruppugazh Arupadai Veedu

அறுபடை வீடு திருப்புகழ் இசை - சம்பந்தம் குருக்கள் | Echoes of Devotion: Thiruppugazh Arupadai Veedu

© 2025 ycliper. Все права защищены.



  • Контакты
  • О нас
  • Политика конфиденциальности



Контакты для правообладателей: [email protected]