திருவொற்றியூர் தேவாரம் பாடல் 4 ம் திருமுறை ஒற்றியூர் thiruvotriyur sivan songs செற்றுக் களிற்றுஉரி
Автор: சிவனடியார்களின் குரல் Sivanadiyarkalin Kural
Загружено: 2023-07-26
Просмотров: 974
Описание:
திருவொற்றியூர் திருப்பாடல்
சிவசிவ
#திருச்சிற்றம்பலம்*
திருஒற்றியூர்
திருநாவுக்கரசர் சுவாமிகள் அருளிய
நான்காம் திருமுறை
பதிகம் எண்-86
பண்-திருவிருத்தம்
செற்றுக் களிற்றுஉரி கொள்கின்றஞான்று செரு வெண்கொம்பு ஒன்று
இற்றுக் கிடந்தது போலும் இளம்பிறை; பாம்பு அதனைச்
சுற்றிக் கிடந்தது கிம்புரி போலச் சுடர் இமைக்கும்;
நெற்றிக்கண் மற்று அதன் முத்து ஒக்குமால் ஒற்றியூரனுக்கே.
சொல்லக் கருதியது ஒன்று உண்டு கேட்கில்: தொண்டுஆய் அடைந்தார்
அல்லல் படக் கண்டு பின் என் கொடுத்தி? அலை கொள் முந்நீர்
மல்லல்-திரைச் சங்கம் நித்திலம் கொண்டு வம்பக் கரைக்கே
ஒல்லை(த்) திரை கொணர்ந்து எற்று ஒற்றியூர் உறை உத்தமனே!
பரவை வரு திரை நீர்க்கங்கை பாய்ந்து உக்க பல்சடைமேல்
அரவம் அணிதரு கொன்றை இளந்திங்கள் சூடியது ஓர்
குரவநறுமலர் கோங்கம் அணிந்து குலாய சென்னி
உரவு திரை கொணர்ந்து எற்று ஒற்றியூர் உறை உத்தமனே!
தான் அகம்காடு அரங்குஆக உடையது; தன் அடைந்தார்
ஊன் அகம் நாறம் உடைதலையில் பலி கொள்வது தான்;
தேன் அகம் நாறும் திரு ஒற்றியூர் உறைவார்அவர்தாம்
தான் அகமே வந்து போனகம் வேண்டி உழிதர்வரே.
வேலைக்-கடல்நஞ்சம் உண்டு வெள்ஏற்றொடும் வீற்றிருந்த
மாலைச் சடையார்க்கு உறைவுஇடம்ஆவது வாரி குன்றா
ஆலைக் கரும்பொடு செந்நெல் கழனி அருகு அணைந்த
சோலை திரு ஒற்றியூரை எப்போதும் தொழுமின்களே!
புற்றினில் வாழும் அரவுக்கும் திங்கட்கும் கங்கை என்னும்
சிற்றிடையாட்கும செறிதரு கண்ணிக்கும் சேர்வுஇடம் ஆம்
பெற்றுடையான் பெரும் பேச்சு உடையான் பிரியாது எனை ஆள்
விற்று உடையான் ஒற்றியூர் உடையான்தன் விரிசடையே.
இன்று அரைக்கண் உடையார் எங்கும் இல்லை; இமயம் என்னும்
குன்றர்ஐக்கு அண் நல் குலமகள்பாவைக்குக் கூறு இட்ட நாள்-
அன்று அரைக்கண்ணும் கொடுத்து உமையாளையும் பாகம் வைத்த
ஒன்றரைக்கண்ணன் கண்டீர் ஒற்றியூர் உறை உத்தமனே!
சுற்றி வண்டு யாழ்செயும் சோலையும் காவும் துதைந்து இலங்கு
பெற்றி கண்டால் மற்று யாவரும் கொள்வர்; பிறர்இடை நீ
ஒற்றி கொண்டாய்; ஒற்றியூரையும் கைவிட்டு உறும் என்று எண்ணி
விற்றிகண்டாய்; மற்று இது ஒப்பது இல் இடம் வேதியனே!
சுற்றிக் கிடந்து ஒற்றியூரன் என் சிந்தை பிரிவு அறியான்;
ஒற்றித் திரிதந்து நீ என்ன செய்தி? உலகம்எல்லாம்
பற்றித் திரிதந்து பல்லொடு நா மென்று கண் குழித்துத்
தெற்றித்து இருப்பதுஅல்லால் என்ன செய்யும் இத் தீவினையே?
அம் கள் கடுக்கைக்கு முல்லைப்புறவம்; முறுவல்செய்யும்
பைங்கண்-தலைக்கு சுடலைக்களரி; பரு மணி சேர்
கங்கைக்கு வேலை; அரவுக்குப் புற்று; கலை நிரம்பாத்
திங்கட்கு வானம் திரு ஒற்றியூரர் திருமுடியே.
தருக்கின வாள் அரக்கன் முடிபத்து இறப் பாதம்தன்னால்
ஒருக்கினஆறு அடியேனைப் பிறப்பு அறுத்து ஆள வல்லான்
நெருக்கின வானவர் தானவர் கூடிக் கடைந்த நஞ்சைப்
பரு(க்)கினஆறு என் செய்கேன்? ஒற்றியூர் உறை பண்டங்கனே!
*அருள்தரும் வடிவுடையாம்பிகை அம்மை உடனமர் அருள்மிகு புற்றிடங்கொண்டநாதர் திருமலரடிகள் போற்றி போற்றி
#சிவனடியார்குரல் #அடியாரின்குரல் #thevarasong #பன்னிருதிருமுறை_பாட்டும்_பொருளும் #சிவனடியார்களின்குரல்பாடல் #sivanadiyarkural #adiyarkural #adiyarkuralpaadal #sivan_whatsapp_status_tamil #sivanadiyar
#திருமுறைபாடல் #thevaaram #sivan_whatsapp_status_tamil #dhevarapadalkal #சிவப்புராணம் #அடியார் திருமுறை #dhevarapadalkal #sivan_whatsapp_status_tamil #sivan #thevaram #sivansongstatus #sivansong #thevarampadal #திருமுறைகள் #திருமுறைஅமுதம் #திருஞானசம்பந்தர் #sivan #thevaram #சிவனடியார்கள் #சிவனடியார் #சிவனடியார்களின் #சிவனடியார்களின்குரல்
#சிவன்மந்திரம் #சிவபுராணபாடல் #சிவபுராணம்விளக்கம் #திருவாசகம்விளக்கம் #திருவாசகம்முற்றும்ஓதல் #திருவாசகம்முற்றும்பாடுதல், #மாணிக்கவாசகர் #நால்வர்துதி #நால்வர் #மாயபிறப்புஅறுக்கும்மன்னன்
#TamilBakthiPadalgal #Devotionalsivansong
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: