Impacters_Plea for Prayer DAY 9️⃣ CHILD CARTOON ADDICTION
Автор: IMPACTERS#IMPACT
Загружено: 2025-11-08
Просмотров: 91
Описание:
DAY 9️⃣ CHILD CARTOON ADDICTION
Cartoons are the most popular entertainment. Kids right from age 2 are addicted to screens. Hidden effects are massive. They don’t eat without watching cartoons. Screens delay a toddler’s ability to form words because they don’t interact and engage. Binge watching leaves a long-lasting effect, as the scenes flash over and again, encouraging DIY (Do It Yourself), eventually leading to a lot of crime. Let us pray for our little spectators of this digital era to be set free from binge-watching!
நாள் 9: சிறுவர்களின் கார்ட்டூன் அடிமைத்தனம்
“கண்ணானது சரீரத்தின் விளக்காயிருக்கிறது, உன் கண் தெளிவாயிருந்தால், உன் சரீரம் முழுவதும் வெளிச்சமாயிருக்கும்." மத்தேயு 6:22
சிறுவர்கள், தொடுதிரை வசதியுடன் கூடிய டிஜிட்டல் திரை (ஸ்மார்ட் ஸ்கிரீன்/Smart screen) யுகத்தில் வாழ்கிறார்கள். இது படைப்பாற்றல் உள்ளடக்கத்தை வழங்குவது மட்டும் அல்லாமல், அவர்களை கற்பனை உலகத்துடன் இணைக்கிறது. சிறுவர்களின் அதிகபட்ச மூளை வளர்ச்சி 7 வயதிற்குள் நிகழ்கிறது, அதன் பிறகு 12 வயதிற்குள் நிகழ்கிறது. அதிவேகமான கார்ட்டூன்கள் அறிவுசார் மற்றும் நிர்வாக செயல்பாட்டில் இடையூறுகளுக்கு வழிவகுக்கிறது, இதனால் தாமதமாக பேசுதல், குறுகிய கவனம் செலுத்துதல் மற்றும் சமூகமயமாக்கல் மற்றும் சுய ஒழுங்குமுறை ஆகியவற்றில் சிரமங்களை ஏற்படுத்துகின்றன என்று ஆராய்ச்சி சான்றுகள் காட்டுகின்றன. கோகோமெலனை (கோகோமெலன் என்பது சிறுவர்களின் யூடியூப் சேனல் ஆகும்.) அதிகமாகப் பார்ப்பது மிகையான தூண்டுதல் உள்ளடக்கத்தைக் கொண்டுள்ளது, மேலும் டோபமைனை வெளியிடுகிறது, இது ஒரு ஏக்க நிலையை உருவாக்குகிறது. சிறுவர்கள் எதைப் பார்க்கிறார்கலோ கேட்கிறார்கலோ, அதுவே அவர்களின் எண்ணங்களை வடிவமைக்கிறது. அவர்கள் என்ன பார்க்கிறார்கள் மற்றும் கேட்கிறார்கள் என்பதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று ஜெபியுங்கள்.
கார்ட்டூன்கள் அவற்றின் ஈர்க்கக்கூடிய வண்ணமயமான விளக்கப்படங்கள், வசீகரிக்கும் உள்ளடக்கம் மற்றும் உள்ளத்தை கொள்ளை கொள்ளும் ஒலியினால் ஈர்க்கின்றன. இருப்பினும், நேர்மறை மற்றும் எதிர்மறை பழக்கங்களை அறிமுகப்படுத்துவதன் மூலம் சிறுவர்களின் நடத்தையை வடிவமைப்பதில் இது குறிப்பிடத்தக்க பங்கை வகிக்கிறது. சிறுவர்களின் நடத்தையை பாதிக்கும் முக்கிய காரணிகள், நுட்பமாக அல்லது வெளிப்படையாக இறுதியில் அவர்களின் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் வன்முறையை சித்தரிப்பதாகும். சிறுவர்கள் தங்களுக்குப் பிடித்த ஆக்ரோஷமான தொலைக்காட்சி கதாபாத்திரங்களைப் பின்பற்ற முயற்சிக்கவோ அல்லது உணர்ச்சிவசப்படவோ கூடாது என்று ஜெபியுங்கள்.
இந்த கார்ட்டூன்களில் ஈர்க்கப்பட்ட சிறுவர்கள், அந்தக் கதாபாத்திரத்தை நேசித்து, அது செய்வதை அப்படியே செய்ய விரும்புகிறார்கள். அவர்கள் உணர்ச்சி ரீதியாக அதனோடு தொடர்பை வளர்த்துக் கொள்கிறார்கள். தனக்குண்டான எல்லா பொருட்களிலும், தங்களுக்கு பிடித்த கார்ட்டூன் கதாநாயகன் இடம்பெற வேண்டும் என்று நினைக்கின்றனர். இது கடுமையான ஆவிக்குரிய பாதிப்புக்கு வித்திடுகிறது. மேலும், பார்வையில் பாதிப்பு, மனச்சோர்வு, தனிமைப்படுத்தல், சுய ஒழுங்குமுறை குறைபாடு மற்றும் உடல் பருமன் ஆகியவற்றிற்கு வழிவகுக்கிறது. பெற்றோர்கள் பிள்ளைகளை ஆரோக்கியமான செயல்பாடுகளில் ஈடுபடுத்தவும், சிறுவர்கள் இந்தத் திரை வெறியிலிருந்து முற்றிலுமாக விடுபடவும் ஜெபியுங்கள். பெற்றோர் பிள்ளைகளுக்கான திரை நேரங்களை கட்டுப்படுத்தும்போது அவர்கள் கோபப்படக்கூடாது என்று ஜெபியுங்கள்.
உங்களுக்குத் தெரியுமா: உலகம் முழுவதும் தங்கள் அருமையான பயன்பாடுகள் மற்றும் பளபளப்பான உயர் தொழில்நுட்ப கருவிகள் வழங்கும் தொழில்நுட்ப ஜாம்பவான்கள் மற்றும் சிலிக்கான் பள்ளத்தாக்கின் கோடீஸ்வரர்கள், தங்கள் பிள்ளைகளை முற்றிலும் தொழில்நுட்பம் இல்லாதவர்களாக வளர்க்கிறார்கள். மேலும் அதன் விளைவுகளை அவர்கள் அறிந்திருப்பதால் அவர்களின் திரை நேரத்தை கண்டிப்பாக கட்டுப்படுத்துகிறார்கள்.
இயேசு அவர்களின் இருதயங்களை தேடிச் சென்று, கட்டுப்படுத்தி, மெய்நிகர் (virtual world) உலகத்திலிருந்து அவர்களை மீட்டெடுப்பாராக. வி. ஜெம்
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: