மேற்கு தொடர்ச்சி மலையின் மறைக்கப்பட்ட ஆன்மீக அதிசயம்! Village Vlogs RK
Автор: Village Vlogs RK
Загружено: 2026-01-18
Просмотров: 83
Описание: வருடத்தில் இரண்டு நாள் மட்டுமே தரிசனம் தரும் சன்னியாசி அப்பன். இவரை ஆடி அமாவாசை தை அமாவாசை ஆகிய இரு தினங்களில் மட்டுமே வழிபட முடியும். முனிகள் கூட்டத்தில் உயரம் குறைந்த தனி மேடையில் இவரை தரிசனம் செய்யலாம். இவரை சன்னாசி அப்பன் என்றும் சன்னியாசி முனி என்றும் அழைப்பார்கள்.இவரை தரிசனம் செய்வதால் ஆரோக்கியமான வாழ்க்கை கிடைக்கும். சகல நோய்களையும் தீர்க்கும் வல்லமை பெற்றவர் சன்னாசி முனிவர். இந்த அம்மாவாசை நாளன்று தென் மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை புரிகின்றனர் . இந்த புண்ணிய தினத்தில் பலரும் அன்னதானம் செய்கின்றனர். சன்னாசியப்பனை காண பக்தர்கள் ஒன்றாக இணைந்து 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ள காட்டிற்குள் செல்கின்றனர். இவர்கள் செல்லும் பாதையில் முதலில் மேகமலையில் இருந்து வரும் ஆறு வெண்ணியாரு அதற்கு அடுத்து தாளோடை ஆறு என மூன்று ஆற்றைக் கடந்து சன்னாசியப்பனை தரிசனம் செய்ய செல்கின்றனர். பக்தர்கள் தாங்கள் கொண்டு சென்ற பொருட்களை வைத்து அபிஷேகம் செய்து ஒரே பொங்கல் வைத்து அனைவருக்கும் பரிமாறிய பின் மீதமுள்ள உணவை காட்டு விலங்குகளுக்கு படைத்து விட்டு இறைவனுக்கு நன்றி சொல்லி ஊர் திரும்புகின்றனர். #VillageVlogsRK
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: