மனோநிக்ரகம் MANONIKRAGAM
Автор: தினசரி ரமண தியானம் Daily Ramana Dhiyanam
Загружено: 2025-02-08
Просмотров: 8721
Описание:
பிபரவரி 9 ஞாயிறு
மனோநிக்ரகம்
நம் கவனம் எண்ணங்கள் மேல் செல்வதால் இல்லாத மனம் இருப்பதுபோல் தெரிகிறது; கவனம் எண்ணுகின்றவன் மேல் போனால் மனம் இருக்காது
‐—-----------------------------------------------
MANONIKRAGAM
Our attention goes on the”THOUGHT” and therefore “MIND” appears to be present; if attention turns on the “THINKER”, there would be no thought and no mind
—------------------------------------------------
#மனம் இல்லாமல் இருப்பதற்கு “மனோநிக்ரகம்” என்று பெயர்
#மனம் என்ற ஒன்று இருக்கிறதா?
நம் உடம்பில் எங்கே இருக்கிறது என்று காட்டுங்கள்? நம்முள் ஆழ்ந்து பார்த்தால், மனம் என்ற ஒன்று தனியாக இல்லை என்பது தெரியும்
#எண்ணங்களின் கூட்டம், தொகுப்பு மனம். எண்ணங்கள் தவிர்த்து மனம் தனியாக இல்லை. ஆழ்ந்த உறக்கத்தில் எண்ணங்கள் எதுவும் இல்லை, எனவே மனமும் அங்கில்லை
#விழித்த உடன் “நான்” என்னும் அகந்தை எண்ணம் உண்டான உடன், அதைப் பற்றிக் கொண்டு மற்ற எண்ணங்கள் படை எடுக்கின்றன. நம் கவனம் அந்த எண்ணங்கள் மேல் செல்வதால், மனம் என்ற ஒன்று இருப்பது போல் தெரிகிறது
#விழிப்பு நிலையிலும், சிலநேரங்களில் எண்ணங்கள் சற்று ஓய்ந்திருந்தால், அப்போது நம்மால் மனம் இல்லாதிருப்பதை உணரமுடியும்
#நம் கவனசக்தி எண்ணங்கள் மேல் செல்லாமல் எண்ணுகின்றவன் மேல் திரும்பினால், எண்ணங்கள் எழாது. அப்போது மனம் இல்லை என்பது புரியும்
#இல்லாத மனதை அடக்க முயற்சிப்பது முயலுக்கு இல்லாத கொம்பை தேடி கண்டு பிடிக்க முயற்சிப்பதற்கு ஒப்பாகும்
#இல்லாத மனதை அடக்க முயற்சிகள் எடுப்பது திருடன் காவல்காரன் போல் வேஷம் போட்டு அவனையே பிடிக்கப் போவது போலாகும்
#மனதின் உள்தோற்றம் ஆத்மா, வெளித் தோற்றம் எண்ணங்கள்: எப்படி சடமான எண்ணங்கள் பரசக்தி வாய்ந்த ஆத்மாவை அடக்க இயலும்?
#அஞ்சும் அடக்கு அடக்கு என்பார் அறிவிலார்
அஞ்சும் அடக்கும் அமரரும் அங்கில்லை
அஞ்சும் அடக்கில் அசேதனமாம் என்றிட்டு
அஞ்சும் அடக்கா அறிவு அறிந்தேனே
என்று பாடுகிறார் திருமூலர்
#ஐம்பொற்களை அடக்கு அடக்கு என்கின்றனர்; ஐம்பொறிகளை அடக்கிய தேவர்களும் இல்லை; ஐம்பொற்களை அடக்குதல் அறிவின்மை; பொறிகளை அடக்க முயற்சிக்காமல், அவைகள் இயல்பாய் இயக்கும் அறிவை அறிந்தேன்
#ஒரு பசுமாடு உள்ளது; அது பால் கொடுக்க முரண்டு பிடித்தால், பலாத்காரத்தை பிரயோகித்து அதனிடம் பால் பெறக்கூடாது; அது முடியவும் முடியாது. கன்றுக்குட்டியை அதன் அருகில் பிடித்துக் கொண்டு, மாட்டிற்கு புண்ணாக்கு பருத்திக் கொட்டை கலக்கி வைத்து, பசு அதை சாப்பிடும்போது, ராமராஜன் போல் ஒரு சினிமா பாட்டு படித்துக் கொண்டே லாவகமாக பால் கறந்தால், மாடட்டிற்கும் இதமாக இருக்கும், பாலும் நிறைய கிடைக்கும்.
#மனதை எதிரிட்டு அடக்க முடியாது; அதன் போக்கில் போய் இயல்பு நிலைக்கு கொண்டு வரவேண்டும்.
“ ஓம் தத் சத்”
—-----------------------------------------------
#ramana #tamil #news
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: