விழாக்கோலம் பூண்டது குன்னூர் | Temple festival | coonoor
Автор: Dinamalar Anmeegam
Загружено: 2025-04-05
Просмотров: 554
Описание:
விழாக்கோலம் பூண்டது குன்னூர் / Temple festival / coonoor
நீலகிரி மாவட்டம் குன்னூர் தந்தி மாரியம்மன் கோயில் சித்திரை தேர்த் திருவிழா ஆண்டு தோறும் வெகு விமர்சையாக கொண்டாடுவது வழக்கம்.
இந்தாண்டு விழாவின் முதல் நிகழ்ச்சியாக கர்நாடக சனாதன சாகித்திய சங்கம் சார்பில் 79வது ஆண்டு கொடியேற்று விழா நேற்றிரவு சிறப்பாக நடைபெற்றது.
விழாவையொட்டி ஆழ்வார்பேட்டை கோதண்ட ராமர் கோயிலில் இருந்து பால்குடம், அபிஷேகப் பொருட்களுடன் புறப்பட்ட ஊர்வலம் தந்தி மாரியம்மன் கோயிலை அடைந்தது.
அங்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து கோயிலில் இருந்து கோதண்ட ராமர் கோயிலுக்கு அம்மன் கொடி எடுத்துச் செல்லப்பட்டது.
கர்நாடக கலாச்சார நிகழ்ச்சிகளில் வீரபத்ர குனுத்தா மற்றும் பூஜா குனுத்தா நடனங்கள் இடம் பெற்றன. இதில் வீர காசே நிகழ்ச்சியில் சூலாயுதம், கத்திகளுடன் பெண்கள் நடனமாடினர்.
வீர காசே நிகழ்ச்சியில் சூலாயுதம், வாளை கையில் ஏந்தி நடனமாடிய பெண் பக்தர்கள் நாக்கில் கற்பூரம் ஏற்றி வழிபட்டு பக்தர்களை பரவசப்படுத்தினர்.
மங்கள இசை மேலதாளத்துடன் உற்சவர் கொடியுடன் ஊர்வலம் நடந்தது. இதில், ராமர், சீதா, அனுமன் அலங்காரத்தில் தேர் பவனி நடந்தது. தொடர்ந்து கொடியேற்ற நிகழ்ச்சி சிறப்பாக நடந்தது.
வரும் நாட்களில் புஷ்ப பல்லக்கு, முத்து பல்லக்கு நிகழ்ச்சிகள் உட்பட தினமும் உபயதாரர்கள் சார்பில் தேர் ஊர்வலம் மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெறும். விழாவையொட்டி குன்னார் களைகட்டியது.#கோயம்புத்தூர் #Coimbatore
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: