சஸ்திர பந்தம் | Sasthirabantham |
Автор: AI Construction Industry R&D
Загружено: 2025-02-27
Просмотров: 85
Описание:
சஸ்திர பந்தம் : வெற்றி, செல்வத்தை அள்ளித்தரும் மிக சக்தி வாய்ந்த முருகன் மந்திரம்.
சஸ்திர பந்தம் : வெற்றி, செல்வத்தை அள்ளித்தரும் மிக சக்தி வாய்ந்த முருகன் மந்திரம்
முருகப் பெருமானை மனமுருக வழிபடுபவர்களை அவருக்கு முன் அவரது வேல் வந்து காக்கும் என்பார்கள். ஞானத்தின் வடிவமான வேல், வெற்றிகளை தருவதுடன் கவசமாக இருந்து நம்மை காக்கக் கூடியது. இந்த வேலை போற்றி வேல் விருத்தம், வேல் வகுப்பு போன்ற எத்தனையோ பாடல்கள் பாடப்பட்டுள்ளது.
வேலை போற்றி பாடும் மிகவும் சக்தி வாய்ந்த பாடல்களில் ஒன்று தான் சஸ்திர பந்தம். இது முருகப் பெருமானுடன் நமக்கு பந்தத்தை ஏற்படுத்தி, அந்த பந்தம் எப்போதும் பலமாக இருக்கும் படி காக்கக் கூடியதாகும். வேல்மாறல் மந்திரத்தை போன்று, முருக பக்தர்கள் பலரிடமும் சமீப காலமாக பிரபலமாகி வரும் பாடல் தான் இந்த சஸ்திர பந்தம்.
சஸ்திர பந்தம் :
முருகப் பெருமானைப் போற்றி எத்தனையோ ஆன்றோர்கள், பல ஆயிரம் பாடல்களை பாடி உள்ளனர். இவற்றில் அனைவருக்கும் தெரிந்த, மிகவும் பிரபலமானது கந்தசஷ்டி கவசம். இது பக்தியுடன் படிக்கும் பக்தர்களை கவசம் போல் இருந்து காக்கும் என்பது நம்பிக்கை. அப்படி கந்தசஷ்டி சஷ்டி போல் கவசமாக இருந்து காப்பதுடன் முருகனின் அருளையும், அனைத்து விதமான நன்மைகளையும், வெற்றிகளையும், செல்வ செழிப்பையும் அள்ளி அள்ளித் தரும் அற்புதமான மந்திரம் தான் சஸ்திரம் பந்தம்.
முருகன் மந்திரம் :
கலியுகக் கடவுள் என போற்றப்படும் முருகப் பெருமானைப் பற்றி அருணகிரிநாதர்
#murugantemple #muruganthunai #murugarmotivationvideo #kanthan #karthikeyan #arumugam #arumugasamy #sasthirabantham #murugarmanthram
திருப்புகழ் பாடினார். முருகன் வேறு, அவரது திருக்கையில் இருக்கும் வேல் வேறு கிடையாது என்பதால் முருகப் பெருமானின் ஆயுதமான வேலையும் போற்றி இவர் பல பாடல்கள் பாடி உள்ளார். அவர் அருணகிரிநாதர் வேலின் ஆற்றலை போற்றி 16 அடிகளில் பாடியது தான் வேல் விருத்தம். இந்த 16 அடிகள் முன்னும், பின்னுமாக போட்டு 64 வரிகள் கொண்ட பதிகளாக மாற்றி வேல்மாறல் என்ற அற்புத பதிகத்தை நமக்கு அருளினார் வள்ளிமலை சச்சிதானந்த சுவாமிகள்.
வேலை போற்றும் பாடல் :
வேல் மாறலை போன்றே மிகவும் சக்தி வாய்ந்த, பல அதிசயங்களை நிகழ்த்தக் கூடிய பாடல் தான் சத்திர பந்தம். முருகனின் அருள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதற்காக பாம்பன் சுவாமிகள் பல பாடல்களை பாடி உள்ளார். இவர் முருகப் பெருமானின் வேலை புகழ்ந்து சித்திரக் கவி வடிவில் பாடியது தான் சஸ்திர பந்தம். இதை வரிசைப்படுத்தி எழுதினால் வேல் வடிவம் தோன்றும். இதை படிப்பவர்களுக்கு கவசம் போல் இருந்து காப்பதுடன், எதிர்மறை எண்ணங்களை போக்கி, அளவில்லான பல நன்மைகளை தரும்.
சஸ்திர பந்தம் என்றால் என்ன?
அஸ்திரம் என்றால் இருக்கும் இடத்தில் இருந்து இலக்கை நோக்கி ஆயுதத்தை ஏவுவது. சஸ்திரம் என்றால் எப்போதும் நமக்கு கவசமாக இருந்து நம்மை காப்பது என்று பொருள். இந்த பாடலை பாராயணம் செய்வதால் தொழிலில் வளர்ச்சி, செல்வ செழிப்பு, நோய் தீருதல், ஞானம் கிடைத்தல், தீமைகள் நெருங்க விடாமல் செய்தல், நினைத்ததை நிறைவேற்றுதல் போன்ற பல நன்மைகளை தரும். வேல் வடிவில் இருக்கும் இந்த சஸ்திர பந்தத்தை கடையில் வாங்கி வைத்தும் வழிபடலாம். முடியாதவர்கள், இந்த மந்திரத்தை மட்டும் படித்தால் கூட போதும்.
சஸ்திர பந்தம் பாடல் :
வாலவே தாந்தபா வாசம்போ கத்தன்பாமாலைபூ ணேமதிற மால்வலர்தே-சாலவமாபாசம் போக மதிதேசார் மாபூதம்வாபாதந் தாவேல வா.
பாடலின் விளக்கம் - தூயவனே, வேதாந்த விலாசக் கடவுளே..பேரின்பமெனும் அனுபவத்திற்கு தலைவனாக இருப்பவனே, மாலைகளை அணியும் செம்பொன் போல் திகழ்பவனே, வன்மை சான்ற திருமாலுக்கும் வல்லவர்களுக்கும் கடவுளானவனே...என்னுடைய மனத்தில் நிறைந்திருக்கும் தேவையல்லவைகளையும், பெரிய ஆணவங்கள், பந்தங்கள் போன்றவை ஒழிய ஞானமும் புகழுமுள்ள பரமான்மாவே வந்தருள்க. உன்னுடைய திருவடிகளாகிய செல்வத்தை எனக்கு தந்தருள வேண்டும்.
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: