கந்த சஷ்டி ஆறாம் நாள் வழிபாடு!
Автор: Aanmeegam Shorts
Загружено: 2025-10-26
Просмотров: 56
Описание: கந்த சஷ்டி ஆறாம் நாள் வழிபாடு வருடத்திற்கு ஒருமுறை வரக்கூடிய மிகவும் சக்தி வாய்ந்த விரதமாக முருகப்பெருமானின் கந்த சஷ்டி விரதம் திகழ்கிறது. இது தொடர்ச்சியாக ஆறு நாட்கள் இருக்க வேண்டிய விரதம் என்றாலும் ஒரு சிலரால் ஆறு நாட்களும் இருக்க இயலவில்லை என்னும் பட்சத்தில் ஆறாவது நாளான சூரசம்கார நாள் அன்று முழுமையாக விரதம் இருந்து முருகப்பெருமானின் அருளை பெறுவார்கள். அப்படிப்பட்ட சிறப்பு மிகுந்த ஆறாவது நாளான சூரசமஹார நாளன்று முருகப்பெருமானை வழிபாடு செய்யும் முறையை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம். கந்த சஷ்டி ஆறாம் நாள் வழிபாடு கந்தசஷ்டி விரதத்தின் ஒவ்வொரு நாளும் மிகவும் சிறப்பு மிகுந்த நாள் என்றாலும் மிக முக்கியமான சூரனை வதம் செய்த நாளாக தான் கந்தசஷ்டி விரதத்தின் ஆறாவது நாள் திகழ்கிறது. அதனால் தான் அந்த நாளை நாம் சூரசம்கார நாள் என்று கூறுகிறோம். தொடர்ச்சியாக ஆறு நாட்களும் விரதம் இருக்க இயலாதவர்கள் கூட ஆறாவது நாளான சூரசம்கார நாளில் முருகப்பெருமானை நினைத்து விரதம் இருந்து வழிபாடு செய்வதன் மூலம் அவர்களுடைய வாழ்க்கையில் சகல நன்மைகளும் உண்டாகும் என்று கூறப்படுகிறது. - Advertisement - இந்த வழிபாட்டை அக்டோபர் மாதம் 27ஆம் தேதி திங்கட்கிழமை அன்று செய்ய வேண்டும். திங்கட்கிழமை அன்று பிரம்ம முகூர்த்த நேரத்திலேயே எழுந்து சுத்தமாக குளித்து முடித்துவிட்டு வீட்டு பூஜை அறையில் முருகப்பெருமானுக்கு முன்பாக 6 நெய் தீபங்களை வடக்கு திசை பார்த்தவாறு ஏற்றி வைத்துக்கொள்ள வேண்டும் பிறகு முருகப்பெருமானுக்கு நெய்வேத்தியமாக பால் அல்லது தண்ணீரை வைத்து விட்டு “ஓம் நமோ சரவணபவ ஓம்” என்னும் மந்திரத்தை 108 முறை கூறி விரதத்தை தொடங்க வேண்டும். அன்றைய தினம் மாலை நேரத்தில் சூரசமஹாரம் நடைபெறும். சூரசம்ஹாரம் நடைபெற்ற பிறகு விரதம் இருப்பவர்கள் குளித்துவிட்டு பூஜையை செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. அவ்வாறு பூஜை செய்யும் பொழுது முருகப்பெருமானுக்கு முன்பாக சற்கோண கோலத்தில் ஆறு எழுத்துக்களின் மேல் 6 நெய் தீபங்களை வடக்கு திசை பார்த்தவாறு ஏற்றி வைத்துக் கொள்ள வேண்டும். வீட்டில் முருகனின் வேல் சிலை இருக்கும் பட்சத்தில் பஞ்சாமிர்த அபிஷேகம் செய்ய வேண்டும். கந்த சஷ்டி கவசத்தை காலையிலும் மாலையிலும் கேட்பது மிகவும் சிறப்பு. மேலும் அன்றைய தினம் நம்மால் எவ்வளவு சிறப்பாக முருகப் பெருமானுக்கு நெய்வேத்தியங்களை சமர்ப்பணம் செய்ய முடியுமோ அவ்வளவு சிறப்பாக நம்மால் இயன்ற அனைத்தையுமே செய்து வைத்து வழிபாடு செய்ய வேண்டும். மாலை நேரத்திலும் “ஓம் நமோ சரவணபவ ஓம்” என்னும் மந்திரத்தை 108 முறை கூறி வாசனை மிகுந்த மலர்களால் முருகப்பெருமானுக்கு அர்ச்சனை செய்ய வேண்டும். அர்ச்சனை நிறைவடைந்த பிறகு கற்பூர தீப தூப ஆராதனை காட்டி வழிபாட்டையும் விரதத்தையும் நிறைவு செய்து கொள்ளலாம். - Advertisement - அன்றைய தினம் மௌன விரதம் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் காலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் வழிபாட்டை செய்து முடித்துவிட்டு மௌன விரதத்தை தொடங்கி மாலை சூரசம்காரம் நிறைவடைந்த பிறகு வழிபாட்டை செய்து மௌன விரதத்தை பூர்த்தி செய்து கொள்ளலாம். இப்படி சூரசம்ஹார நாளில் மௌன விரதம் இருப்பவர்களுக்கு காரிய தடைகள் முற்றிலும் நீங்கும், தொட்ட காரியங்களில் வெற்றிகள் உண்டாகும், மன நிம்மதி உண்டாகும். இதையும் படிக்கலாமே:வெற்றிகளை தரும் வேல் வழிபாடு முருகப்பெருமானுக்கு உகந்த சூரசம்கார நாளில் முருகன் எப்படி சூரனை வதம் செய்து தேவர்களுக்கு மகிழ்ச்சியை அளித்தாரோ அதேபோல் நாமும் முருகப்பெருமானை வழிபாடு செய்து நம்முடைய கஷ்டங்கள் அனைத்தையும் நீக்கி மகிழ்ச்சியுடன் வாழலாம் என்று தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.!#aanmeegamsshorts# ஆன்மீகத் ஆன்மீகத்# கந்தசஷ்டி விரதம்# கந்த சஷ்டி#
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: