செல்வம் தங்க வாழ்வில் ஒரு முறையாவது செல்ல வேண்டிய தலம் | வெஞ்சமாங்கூடலூர் கல்யாண விகிர்தீஸ்வரர்
Автор: ஆன்மீகத்துடன் நட்பு
Загружено: 2024-01-15
Просмотров: 45443
Описание:
தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்கள்
வெஞ்சமாங்கூடலூர் கல்யாண விகிர்தீஸ்வரர் கோயில்
தேவாரம் பாடல் பெற்ற தலங்களில் கொங்கு நாட்டில் அமைந்துள்ள ஏழு தலங்களுள் இத்தலம் ஐந்தாவது தலமாகப் போற்றப் படுகிறது. இவ்வூரை வெஞ்சமாங்கூடலூர் என்று மக்கள் அழைக்கிறார்கள்.
மூலவர்: கல்யாண விகிர்தேஸ்வரர்
அம்பாள்: மதுரபாஷிணி, பண்ணேர்மொழியம்மை
தல விருட்சம்: வில்வம்
தல தீர்த்தம்: விகிர்த தீர்த்தம்
ஊர்: வெஞ்சமாங்கூடலூர்
மாவட்டம்: கரூர்
பொது தகவல்
ஒரு சமயம் வேடசந்தூர் பக்கத்திலுள்ள அணைக்கட்டு உடைந்து போனது.
குடகனாற்றில் வெள்ளப்பெருக்கெடுத்து ஊரும் பல நூற்றாண்டுகளான பழமையான இக்கோவிலும் அழிந்து போயின. இக்கோயிலின் கட்டுமானத்திலிருந்த கருங்கற்கள் வெள்ளத்தில் இரணடு கி.மீ. தூரம் வரை இழுத்துச் செல்லப்பட்டன. பின்பு, 1982-ம் ஆண்டு ஈரோடு அருள் நெறித் திருக்கூட்டத்தாரால் இக்கோயில் திருப்பணியைத் தொடங்கி, பெருமுயற்சி செய்து, திருக்கோயிலைப் புதியதாக எடுப்பித்தார்கள். நான்கு ஆண்டுகளாக பணிகள் நிறைவடைந்து,
மகா கும்பாபிஷேகத்தை நடத்தி முடித்துள்ளார்கள்.
ஆலய அமைப்பு
கொங்கு நாட்டு திருத்தலங்ளுக்கே உரித்தான கருங்கல் விளக்குத் தூண் (தீபஸதம்பம்) இராஜகோபுரத்திற்கு எதிரே காணப்படுகிறது.
தலவரலாறு
தேவர்களின் அரசனாகிய இந்திரன் இங்கு வந்து, தனக்கு ஏற்பட்ட சாபத்தைப் போக்கிக் கொள்வதற்காக இங்கு வந்து இறைவனை வழிபட்டு சாபம் நீங்கப் பெற்றான் என்பது ஐதீகம்.
சுந்தரருக்குச் சிவனார் பொன் கொடுத்த தலங்களில், வெஞ்சமாக்கூடலான இத்தலமும் ஒன்று.
சுந்தரர் பாடலுக்கு மகிழ்ந்து சிவபெருமான் ஒரு கிழவராக வந்து தன் இரு குமாரர்களை ஒரு மூதாட்டியிடம் (இவ்வுருவில் வந்தது பார்வதி தேவியே) ஈடு காட்டிப் பொன் பெற்று சுந்தரருக்கு பரிசு வழங்கினார் என்று இத்தலத்து வரலாறு கூறுகிறது.
பிராத்தனை
இந்த தலத்தை ஒரு முறை தரிசனம் செய்தாலே போதும் செல்வம் சேரும். இந்த தலத்தை தரிசனம் செய்து இந்த தலத்தை விட்டு 16 படிகள் ஏறி செல்லும் போது 16 விதமான செல்வங்கள் கிடைக்கும். திருமண தடை நீங்க வழிபாடு செய்ய வேண்டிய தலம். பிரிந்த தம்பதியர் ஒன்று சேர இந்த தலத்தில் உள்ள முருகனுக்கு திருமணம் செய்து வழிபடலாம்.
இருப்பிடம்:
கரூரில் இருந்து அரவங்குறிச்சி செல்லும் சாலையில் சுமார் பதினான்கு கி.மி. தென்மேற்கே பயணம் செய்தால் ஆறு ரோடு பிரிவு என்ற இடம் வரும். இங்கிருந்து பிரியும் ஒரு கிளைச் சாலயில் சுமார் எட்டு கி.மி. சென்றால் இந்த தலத்தை அடையலாம்.கரூர் - ஆற்றுமேடு நகரப் பேருந்து வெஞ்சமாங்கூடல் வழியாகச் செல்கிறது.
ஆலய அர்ச்சகர் தொலைபேசி எண்
+91 6383768348
மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்
+91 7994347966
கோயில் Google Map link
https://maps.app.goo.gl/GsX7gaAeKLz6m...
விளமல் பதஞ்சலி மனோகர்
• சிவன் பாதம் இருக்கும் விளமல் பதஞ்சலி மனோகர...
if you want to support us via UPI Id
nava2904@kvb
Join our channel what's app Group
https://chat.whatsapp.com/LRPxBQMNHRA...
Join this channel to get access to perks:
/ @mathinam2301
தமிழ்
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: