Ennai marava yesu natha - Lyrics | என்னை மறவா இயேசு நாதா |Tamil Christian Song | Lyrics | HD Video |
Автор: Kiraan Johnny
Загружено: 2026-01-26
Просмотров: 17
Описание:
என்னை மறவா இயேசு நாதா
உந்தன் தயவால் என்னை நடத்தும் -(4)
வல்ல ஜீவ வாக்குத்தத்தங்கள்
வரைந்தெனக்காய் ஈந்ததாலே ஸ்தோத்திரம் -(2)
ஆபத்திலே அரும் துணையே
பாதைக்கு நல்ல தீபமிதே -(2)
என்னை மறவா இயேசு நாதா
உந்தன் தயவால் என்னை நடத்தும் -(2)
பயப்படாதே வலக்கரத்தாலே
பாதுகாப்பேன் என்றதாலே ஸ்தோத்திரம் -(2)
பாசம் என்மேல் நீர் வைத்ததினால்
பறிக்க இயலாதெவருமென்னை -(2)
என்னை மறவா இயேசு நாதா
உந்தன் தயவால் என்னை நடத்தும் -(2)
தாய் தன் சேயை மறந்து விட்டாலும்
மறவேன் உன்னை என்றதாலே ஸ்தோத்திரம் -(2)
வரைந்தீரன்றோ உம் உள்ளங்கையில்
உன்னதா எந்தன் புகலிடமே -(2)
என்னை மறவா இயேசு நாதா
உந்தன் தயவால் என்னை நடத்தும் -(2)
திக்கற்றோனாய் கைவிடேனே
கலங்கிடீரே என்றதாலே ஸ்தோத்திரம் -(2)
நீர் அறியா யாதும் நேரிடா
என் தலைமுடியையும் எண்ணினீரே -(2)
என்னை மறவா இயேசு நாதா
உந்தன் தயவால் என்னை நடத்தும் -(2)
உன்னை தொடுவோன் என் கண்மணியை
தொடுவதாக உரைத்ததாலே ஸ்தோத்திரம் -(2)
அக்கினியின் மதிலாக
அன்பரே என்னைக் காத்திடுமே -(2)
என்னை மறவா இயேசு நாதா
உந்தன் தயவால் என்னை நடத்தும் -(4)
என்னை முற்றும் ஒப்புவித்தேன்
ஏற்று என்றும் நடத்துவீரே ஸ்தோத்திரம் -(2)
எப்படியும் உம் வருகையிலே
ஏழை என்னைச் சேர்த்திடுமே -(2)
என்னை மறவா இயேசு நாதா
உந்தன் தயவால் என்னை நடத்தும் -(4)
#tamilchristiansongs #gospel #music #holyspirit #song #jesus# #worship #trendingstatus #tamil lyrics # #healing #prayer #blessings #miracle #TamilBlessingSong # தமிழ் # tamil
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: