தமிழுக்கும் அமுதென்று பேர் | தமிழ் இசை| Tamil music| song|
Автор: Meyinneri
Загружено: 2025-11-02
Просмотров: 610
Описание:
கவிஞர் பாரதிதசனின் வரிகளில் தமிழ் பெருமை உணர்த்தும் பாடல். தமிழால் இணைவோம், தமிழ் மீட்சி வேண்டி எழுவோம், நாம் தமிழர் என பெருமை கொள்வோம்.
ஆங்கில மாதம் நவம்பர் முதலாம் நாள் தமிழ் நாடு நாள் மக்களால் கொண்டாடப்படுகிறது. தமிழ் மக்கள் அனைவர்க்கும் தமிழ் நாடு நாள் வாழ்த்துக்கள். சென்னை மாகாணத்திற்கு தமிழ்நாடு எனப்பெயரிடக் கோரி தனி நபராக சங்கரலிங்கனார் 79 நாட்கள் உண்ணா நிலை போராட்டம் நடத்தி உயிர்நீத்தார். ஐயா சங்கரலிங்கனார் புகழ் போற்றுவோம், தமிழ் பெருமை காப்போம்.
Created by thecriticspoetry / Meyinneri
www.instagram.com/thecriticspoetry
www.instagram.com/meyinneri
For more poetry follow my English channel
youtube.com/ @thecriticspoetry2.0
Music generated with AI.
Watch in HD with sound for full experience.
________
முழு பாடல் வரிகள்
தமிழுக்கும் அமுதென்று பேர் - அந்தத்
தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்
தமிழுக்கு நிலவென்று பேர்! - இன்பத்
தமிழ் எங்கள் சமுகத்தின் விளைவுக்கு நீர்
தமிழுக்கு மணமென்று பேர்! - இன்பத்
தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்
தமிழுக்கு மதுவென்று பேர்! - இன்பத்
தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர்!
(தமிழுக்கும் அமுதென்று)
தமிழ் எங்கள் இளமைக்குப் பால் - இன்பத்
தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல்
தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்! - இன்பத்
தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன்
தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்! - இன்பத்
தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள்
தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்! - இன்பத்
தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ!
(தமிழுக்கும் அமுதென்று)
------------------------------------------------------------
மேலும் தமிழ் பாடல்கள் மற்றும் கவிதைகளுக்கு
www.instagram.com/மெய்ந்நெறி
#tamilan #tamilliterature #tamilpoem #kavithai #KanneThangam #தமிழ்பாடல் #TamilPride #CinematicTamil #TamilVillage #தமிழ்நாடு #TamilCulture #TamilHeritage #VillageLife #தமிழ்சிறுகாட்சி #TamilCinematic # தீரன் சின்னமலை #tamilan #dheeranchinnamalai #seeman #naamtamilar #naamtamilarkatchi #tamil #thecriticspoetry #bharathidasan #tamil #tamilpoetry
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: