பந்தய புறா வளர்ப்பு முறை | ரேஸ் புறா | Race Pigeons | Homer | Hello Madurai | App | TV | FM |
Автор: Hello Madurai
Загружено: 2021-05-10
Просмотров: 19903
Описание:
கால்நடை பிரிவில் பெட்ஸ் வகையில், புறா வளர்ப்பு மிகவும் தனிச்சிறப்பானது. இந்த வீடியோ முதல் என்பதால் அது குிறத்த ஆர்வம் அதிகமாகவே இருந்தது. உயர்திரு. செல்வம் அவர்கள் 25 ஆண்டுகள் அனுபவம் புறா வளர்ப்பில் உள்ளார். (மதுரை ரேசிங் பிஜியன் கவுன்சிலிங் செயலாளர்) இவரைப் பற்றி கூற வேண்டும் என்றால், புறா வளர்ப்பில் மிகுந்த கட்டுப்பாடு உடையவர். அதற்கான மரியாதையை முழுமையாக வழங்குபவர்.
யராயைும் புறா பக்கத்தில் அவ்வளவு எளிதாக நெருங்கிட முடியாது. இதன் மீது மிகுந்த ஆர்வம் கொண்ட அவரது மூத்த மகன் 12ஆம் வகுப்பு படிக்கும் வரை இதன் பக்க்தில் நெருங்க விட வில்லை என்பதே அதற்குச் சான்று. இன்றைக்கு அவரது மகன் பிரவீன் அப்பாவைப் போலவே புறா வளர்ப்பில் அசத்தி வருகின்றார்.
மதுரை பழங்காநத்தம் பகுதியில் இவரது வீட்டின் மாடியில் பல்வேறு வகையான புறாக்களை வளர்த்து வருகின்றார். இவரது புறாக்களின் தனிச் சிறப்பே பழைய லயனேஜ் பாதுகாத்து வருவதுதான். மதுரை கட்ட மூக்கு புறா எனும் ரகத்தை பதுபித்து வருகின்றார் அதுகுறித்து தனி வீடியோ பதிவினை விரைவில் காண்போம்.
இதுபோக அழகு புறாக்கள் மற்றும் ரேஸ் (பந்தய) புறாக்கள் (ஹோமர்) அதிகமாக வளர்த்து வருகின்றார். இதனை யாருக்கும் விற்பனை செய்வதில்லை. கிட்டதட்ட 25 ஆண்டுகளாக பழைய லயனேஜ் பந்தய புறாக்கள் வழிவழியாக வளர்த்து வருகின்றார்.
இவரது பந்தய புறாக்கள் தமிழக அளவில் (மாநிலம்) இதுவரை 2 தங்கம், 5 வெள்ளி பதக்கங்கள் வென்றுள்ளது. தமிழக அளவில் நடைபெறும் ஓப்பன் ரேஸ் போட்டியில் வெற்றி பெறுவது என்பது மிகச் சாதாரணமான விசயம் அல்ல. ஏனெனில் இந்த போட்டியில் 500க்கும் மேற்பட்ட புறாக்கள் கலந்த கொள்ளும். இதுபோக மாவட்ட அளவில் புறா கிளப் பிரிவில் பல்வேறு பரிசுகளையும், சான்றிதழ்களையும் வென்றுள்ளது. ஒன்லேப் பந்தயத்திலும் தங்க பரிசு வென்றுள்ளார்.
திரு. செல்வம் அவர்களது புறா, 1000 மையல்களைத் தாண்டி தனது வீட்டிற்கு வந்தடைந்துள்ளது. இதுபோல 300, 500, 750 கி,மீ தொலைவு போட்டிகளில் கலந்து கொண்டு முதலாம் இடம் முதல் 9வது இடம் வரை பல்வேறு பரிசுகளை வென்றுள்ளது. புறா பந்தயம் என்பது மிகச் சாதாரண விசயம் அல்ல, மன்னர் காலத்தில் இருந்தே இருக்க கூடிய பாரம்பரிய விளையாட்டு முறைகளில் இதுவும் ஒன்று என்கிறார்.
புறா பந்தயத்தில் சாதாரணமானவர்கள் முதல் பெரும் பணக்காரர்கள் வரை இதில் ஈடுபட்டு இருப்பதாகவும், தமிழக அளவில் நடைபெறும் புறா பந்தயத்தயமானது ஒரு திருமணத்தை போல் அதிக செலவில் நடைபெறும் என்றும் அவர் கூறியுள்ளார்.
அழகு புறா வளர்ப்பவர்களுக்கும், பந்தய புறா வளர்ப்பவர்களுக்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளது. வெறும் புறா தானே என்று யாரும் நினைத்துவிட முடியாத அளவிற்கு இதில் எக்கசக்க விசயம் இருக்கின்றது. நாமே போட்டிக்கு பின்பு அதன் ஆச்சர்யத்திலிருந்து விடுபட முடியாமல் திகைத்து நின்றோம். ஏன் புறா வளர்க்க வேண்டும், பந்தயத்தில் விட வேண்டும் என்ற ஆசை பிறந்துவிட்டது.
இங்கு எழுத்து வடிவில் மட்டுமல்ல வீடியோவிலும் கூறியது சிறு பகுதிதான். புறா வளர்ப்பு மற்றும் பந்தயம் குறித்து கூறவேண்டுமானால் வானளவு உள்ளது. அதில் கொஞ்சம் கொஞ்சமாக இறக்கை விரித்து பறப்போம்.
வீடியோவை பார்த்துவிட்டு, பகிருங்கள், திரு செல்வம் அவர்களின் தொடர்பு எண் கொடுக்கப்பட்டுள்ளது. உங்கள் தேவைக்கு மட்டுமே அழையுங்கள். தொந்தரவு செய்யாதீர்கள். அடுத்த ஒரு புறா சந்திப்பில் உங்களை சந்திக்கின்றேன்.
நன்றிகள்!!
உயர் திரு. செல்வம் : 96002 83362.
_________________________________________________________
இதுபோல் உங்கள் தொழில் சார்ந்த வீடியோக்கள் எடுக்க நீங்கள் எங்களை அழைக்க வேண்டிய அலைபேசி எண்:
Hello Madurai M.Ramesh - 95 66 53 1237. (Whatsapp)
_________________________________________________________
மேலும் எங்களது Hello Madurai App எனும் பிரத்யேக செயலியை கூகுல் பிளே ஸ்டோரில் இலவசமாக பதிவிறக்கம் செய்து எங்கள் வீடியோக்கள் உள்பட ஒட்டுமொத்த மதுரையையும் உள்ளங் கையில் வைத்துக் கொள்ளலாம்.
💓 App Link: https://play.google.com/store/apps/de...
💓 Facebook : / maduraivideo
💓web site :www.hellomaduraitv.com
💓web site :www.hellomadurai.in
💓web site :www.tamilvivasayam.com
💓 Telegrame Link: https://t.me/hellomadurai
_________________________________________________________
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: