ycliper

Популярное

Музыка Кино и Анимация Автомобили Животные Спорт Путешествия Игры Юмор

Интересные видео

2025 Сериалы Трейлеры Новости Как сделать Видеоуроки Diy своими руками

Топ запросов

смотреть а4 schoolboy runaway турецкий сериал смотреть мультфильмы эдисон
Скачать

வேர்க்கடலை சாகுபடி முறை | groundnut | groundnut | verkadalai | A to Z

Автор: விவசாயம் செய்வோம் - Vivasayam Seivom

Загружено: 2020-12-27

Просмотров: 165274

Описание: வேர்க்கடலை சாகுபடி முறை | groundnut | groundnut | verkadalai | A to Z
#groundnut# balajitindivanam#

வேர்க்கடலை, கச்சான் என்று பொதுவாய் அழைக்கப்படும் நிலக்கடலை, மக்களால் விரும்பி உண்ணப்படும் கொட்டைகளைத் தரும் பருப்பு வகை தாவரமாகும்.

தென் அமெரிக்காவை பூர்வீகமாகக் கொண்ட இந்த தாவரம் இன்று உலக நாடுகள் அனைத்திலும், உண்ணும் உணவில் ஒரு முக்கியமான இடத்தை பிடித்துள்ளது.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியில் தென் ஆற்காட்டில் இந்த பயிர் அதிகம் விளைவிக்கப்பட்டதால் அது கிழக்கு கடற்கரை வழியாய் பிலிப்பைன்ஸ் நாட்டில் இருந்து இந்தியா வந்ததாக கருதப்படுகிறது.

இன்று உலக அளவில் வேர்க்கடலை உற்பத்தியில் முன்னனி நாடாக இந்தியா உள்ளது. ஏறத்தாழ எட்டு மில்லியன் ஹெக்டேர்களில் கடலை சாகுபடி செய்யப்படுகிறது.

முக்கியமாக ஆந்திரம், தமிழகம், குஜராத், கர்நாடகம், மற்றும் மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களில் கடலை சாகுபடி அதிகமாக உள்ளது.

எப்படி பயிரிடுவது…?
இரகங்கள் :

டி.எம்.வி 7, டி.எம்.வி 10, கோ.3, கோ.ஜி.என் 4, கோ.ஜி.என் 5, ஏ.எல்.ஆர் 3, வி.ஆர்.ஐ2, வி.ஆர்.ஐ3, வி.ஆர்.ஐ.ஜி.என் 5, வி.ஆர்.ஐ 6 ஆகிய இரகங்கள் சாகுபடிக்கு ஏற்றவை.

பருவம்

நிலக்கடலை விதைப்புக்குச் சிறந்த பருவம் ஜுன் – ஜுலை மற்றும் டிசம்பர் – ஜனவரி மாதங்களே ஆகும்.

மண்

மணற்பாங்கான வண்டல், செம்மண் நிலங்கள் நிலக்கடலை சாகுபடிக்கு ஏற்றவை.

நிலம் தயாரித்தல்

கோடை காலத்தில் நிலத்தை நன்றாக குறுக்கு உழவு செய்து, அதிலுள்ள களைகளை நீக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் கோடை மழையில் மண்ணில் மழை நீர் சேமிக்கப்படுகிறது அல்லது கோடை மழையில் சணப்பை போன்ற பயிர்களை விதைத்து பூக்கும் தருணத்தில் அதை மடக்கி உழுதும் நிலத்தைத் தயார் செய்து வைக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் பருவமழை வந்தவுடன் விதைப்புக்கருவி கொண்டு விதைப்பதற்கு ஏதுவாக இருக்கும்.

செம்மண் நிலங்களைப் பொறுத்தவரையில் மேல்மண் இறுக்கம் கடலை மகசூலை மிகவும் பாதிக்கிறது.
மேல் மண் இறுக்கத்தை நிவர்த்தி செய்ய எக்டருக்கு 2 டன் சுண்ணாம்பு மற்றும் 12.5 டன் தொழு உரம் அல்லது மக்கிய தென்னை நார்க்கழிவு கடைசி உழவின் போது இட வேண்டும். மேலும் அடிமண் கடின அடுக்கை உடைக்க 3 வருடத்திற்கு ஒருமுறை உளிக்கலப்பை கொண்டு உழ வேண்டும்.

விதையளவு

எக்டருக்கு 125 கிலோ விதையினைப் பயன்படுத்தவேண்டும். பெரிய விதை கொண்ட இரகங்களுக்கு விதை அளவில் 15 சதவிகிதம் கூடுதலாக தேவைப்படும்.

விதைநேர்த்தி

ஒரு கிலோ விதைக்கு சூடோமோனாஸ் 10 கிராம் அல்லது டிரைக்கோடெர்மா 4 கிராம் கொண்டு விதை நேர்த்தி செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதால் விதை முளைப்புத்திறன் அதிகரிக்கப்படுவதுடன் பூச்சி மற்றும் நோய் எதிர்ப்புத்திறன் அதிகரிக்கிறது. விதை நேர்த்தி மிகவும் கவனமாக செய்ய வேண்டும். ஏனெனில் விதை நேர்த்தி செய்யும் போது விதை உறையில் பாதிப்பு ஏற்பட்டால் முளைப்புத்திறன் பாதிக்கப்படும்.

விதை நேர்த்தி செய்யாவிட்டால், ஏக்கருக்கு ரைசோபியம் 4 பாக்கெட்(800 கிராம்) மற்றும் பாஸ்போபாக்டீரியா 4 பாக்கெட் (800 கிராம்) உடன் 10 கிலோ தொழு உரம் மற்றும் 10 கிலோ மணலுடன் கலந்து விதைப்பதற்கு முன்னால் இட வேண்டும்.

விதைத்தல்

நிலக்கடலைக்கு வரிசைக்கு வரிசை 30 செ.மீ, செடிக்கு செடி 10 செ.மீ இடைவெளியும் விட்டு விதைக்க வேண்டும். மானாவாரி செம்மண் மற்றும் செம்புரை நிலங்களில் விதைப்புக்கருவி கொண்டு விதைக்கும் போது விதையின் அளவு குறைவதுடன் மண்ணில் ஈரம் குறைவதற்குள் விதைத்து விடலாம். விதைக்கருவியின் மூலம் விதைப்பதால் சரியான பயிர் இடைவெளியை கடைபிடிக்கலாம். இவ்வாறு செய்வதால் களை நிர்வாகம் செய்வதற்கு ஏதுவாகவும் மற்றும் பயிர் வளர்ச்சி சீராகவும் இருக்கும்.

நீர் நிர்வாகம்

விதைக்கும் சமயம் ஈரப்பதம் உள்ளவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். பின்னர் உயிர்த் தண்ணீர் விதைத்த 4-5வது நாள் விட வேண்டும். மண்ணின் ஈரப்பதத்தைப் பொறுத்து வாரம் ஒரு முறை நீர் விடவேண்டும்.

உரங்கள்
ரைசோபியம் மற்றும் பாஸ்போபாக்டீரியா உயிர் உரத்தினை ஏக்கருக்கு 4 பாக்கெட் வீதம் அடியுரமாக இடுவதால் தழைச்சத்து மற்றும் மணிச்சத்து நிலக்கடலைக்கு சீராகக் கிடைக்கும்.

ஜிப்சம் இடுதல்

நிலக்கடலை உற்பத்தியில் பயிருக்கு ஜிப்சம் இடுவது மிக அவசியம். ஜிப்சத்தில் சுண்ணாம்புச் சத்தும், கந்தகச் சத்தும் அடங்கி உள்ளன. சுண்ணாம்புச் சத்து காய்கள் திறட்சியாகவும், அதிக எடை உடையதாகவும் உருவாக வழி செய்கிறது. கந்தகச் சத்து நிலக்கடலையில் எண்ணெய்ச் சத்தை அதிகரிக்கிறது. ஒரு ஏக்கருக்கு 160 கிலோ ஜிப்சத்தை விதைத்த 40-45ம் நாள் இட்டு செடிகளைச் சுற்றி மண் அணைக்க வேண்டும்.

அறுவடை

முதிர்ந்த இலைகள் காய்ந்து விடுதல் மற்றும் மேல்மட்ட இலைகள் மஞ்சளாவதும் முதிர்ச்சியைக் குறிக்கும். கால அளவைப்பொறுத்து பயிர் கண்காணிக்கப்பட வேண்டும். தோராயமாக ஒரு சில செடிகளைப் பிடுங்கி காய்களை உரிக்க வேண்டும். ஓட்டின் உட்புறம் வெள்ளையாக இல்லாமல் பழுப்பு கலந்த கறுப்பு நிறத்தில் இருப்பின் அது முதிர்ச்சி நிலையைக் குறிக்கிறது.

அறுவடைக்கு முன் நீர் பாய்ச்ச வேண்டும். நீர் பாய்ந்த நிலம்
சுலபமாக அறுவடைக்கு உதவுகிறது. மண்ணில் போதுமான ஈரப்பதம் இருப்பின் அறுவடைக்கு முன் நீர் பாய்ச்சத் தேவையில்லை. பிடுங்கப்பட்ட செடிகளைக் குவியலாக வைக்கக் கூடாது. ஏனெனில் ஈரமாக உள்ள போது, குறிப்பாகக் கொத்து ரகங்கள் முளைக்க ஆரம்பித்து விடும்

any questions

balaji tindivanam
for contact
9789506317

Не удается загрузить Youtube-плеер. Проверьте блокировку Youtube в вашей сети.
Повторяем попытку...
வேர்க்கடலை சாகுபடி முறை  | groundnut | groundnut | verkadalai | A to Z

Поделиться в:

Доступные форматы для скачивания:

Скачать видео

  • Информация по загрузке:

Скачать аудио

Похожие видео

@deejayfarming8335 வேர்கடலை சாகுபடி சாதனை அளவை கடந்து

@deejayfarming8335 வேர்கடலை சாகுபடி சாதனை அளவை கடந்து

Amazing Agriculture Machines Operating At An INSANE LEVEL

Amazing Agriculture Machines Operating At An INSANE LEVEL

நிலக்கடலை சாகுபடி தொழில்நுட்பங்கள் | Groundnut cultivation technology

நிலக்கடலை சாகுபடி தொழில்நுட்பங்கள் | Groundnut cultivation technology

இதுவரை வெளிவராத அனுபவ ஆன்மீக பரிகாரங்கள் 100% வெற்றி பெற்ற பரிகாரங்கள் saathur sakthivel

இதுவரை வெளிவராத அனுபவ ஆன்மீக பரிகாரங்கள் 100% வெற்றி பெற்ற பரிகாரங்கள் saathur sakthivel

Сельскохозяйственные инструменты, изобретения и хитрости, которые вам не хотят показывать

Сельскохозяйственные инструменты, изобретения и хитрости, которые вам не хотят показывать

Hand Weeding in Groundnut Crop 🌱 | நிலக்கடலை கைமுறை களையெடுப்பு

Hand Weeding in Groundnut Crop 🌱 | நிலக்கடலை கைமுறை களையெடுப்பு

250ரூபாய் உரத்தால் ஏக்கருக்கு 50 மூட்டை மகசூல் | நிலக்கடலையில் எடை கூடுவதற்கான உரங்கள்

250ரூபாய் உரத்தால் ஏக்கருக்கு 50 மூட்டை மகசூல் | நிலக்கடலையில் எடை கூடுவதற்கான உரங்கள்

வேர்க்கடலை சாகுபடி முறையாக செய்வது எப்படி | verkadalai cultivation in Tamil | villagethamizhavillage

வேர்க்கடலை சாகுபடி முறையாக செய்வது எப்படி | verkadalai cultivation in Tamil | villagethamizhavillage

🥔 Посадка картофеля вразвал без окучивания 🌱 Выращивание по технологии Гордеевых

🥔 Посадка картофеля вразвал без окучивания 🌱 Выращивание по технологии Гордеевых

நிலக்கடலை சாகுபடியில் அதிக மகசூல் பெறுவது எப்படி ? | Groundnut cultivation | Tamil | nilakadalai

நிலக்கடலை சாகுபடியில் அதிக மகசூல் பெறுவது எப்படி ? | Groundnut cultivation | Tamil | nilakadalai

ЛАЙФХАКИ И САМОДЕЛКИ РАЗНЫХ СТРАН МИРА / LIFE HACKS AND INVENTION OF DIFFERENT COUNTRIES THE WORLD

ЛАЙФХАКИ И САМОДЕЛКИ РАЗНЫХ СТРАН МИРА / LIFE HACKS AND INVENTION OF DIFFERENT COUNTRIES THE WORLD

இயற்கை நிலக்கடலை செடி வளர்ப்பது எப்படி? கிர்னார் 5 |How to Grow groundnut/peanut Plant from seed

இயற்கை நிலக்கடலை செடி வளர்ப்பது எப்படி? கிர்னார் 5 |How to Grow groundnut/peanut Plant from seed

The Amazing Process of Growing Bananas by the Millions – From Tissue Culture to Export

The Amazing Process of Growing Bananas by the Millions – From Tissue Culture to Export

СОВЕТСКАЯ МОЩЬ ПРОТИВ СТИХИИ! Эвакуация трактора силами ТТ-4, МТЛБ, К-700, ТДТ-55  и ДТ-75.

СОВЕТСКАЯ МОЩЬ ПРОТИВ СТИХИИ! Эвакуация трактора силами ТТ-4, МТЛБ, К-700, ТДТ-55 и ДТ-75.

நிலக்கடலை சாகுபடி - விதை முதல் அறுவடை வரை அனைத்தும் ஒரே வீடியோவாக ! #groundnut #rootsmatepro

நிலக்கடலை சாகுபடி - விதை முதல் அறுவடை வரை அனைத்தும் ஒரே வீடியோவாக ! #groundnut #rootsmatepro

Giant Wood Processing Factory Processes Thousand Year Old Trees | An Amazing Sight, Danger Lurks

Giant Wood Processing Factory Processes Thousand Year Old Trees | An Amazing Sight, Danger Lurks

கடலை விதைக்க இனி கவலை இல்லை.. விவசாயியே உருவாக்கிய கருவி | Groundnut Planter | Peanut Seeding

கடலை விதைக்க இனி கவலை இல்லை.. விவசாயியே உருவாக்கிய கருவி | Groundnut Planter | Peanut Seeding

Funny Workers | Working with Modern Machinery . EP2 #construction #adamrose #workers #smart #funny

Funny Workers | Working with Modern Machinery . EP2 #construction #adamrose #workers #smart #funny

நிலக்கடலை சாகுபடி நேர்காணல் #DeltaParavai_#Puliyanguzhi

நிலக்கடலை சாகுபடி நேர்காணல் #DeltaParavai_#Puliyanguzhi

நிலக்கடலை சாகுபடி- டிரம் கொண்டு உருட்டுவதால் அதிக மகசூல் 🌱 #பிரிட்டோராஜ்🌱9944450552

நிலக்கடலை சாகுபடி- டிரம் கொண்டு உருட்டுவதால் அதிக மகசூல் 🌱 #பிரிட்டோராஜ்🌱9944450552

© 2025 ycliper. Все права защищены.

  • Контакты
  • О нас
  • Политика конфиденциальности

Контакты для правообладателей: [email protected]