ஓசூரில், சுயம்பு கோட்டை ஸ்ரீ மாரியம்மன் மலர்மாலைகள் விற்பனை வளாகம் திறப்பு விழா..
Автор: Star News Hosur
Загружено: 2025-12-11
Просмотров: 173
Описание:
ஓசூஓசூரில், சுயம்பு கோட்டை ஸ்ரீ மாரியம்மன் மலர்மாலைகள் விற்பனை வளாகம் திறப்பு விழா. 40-க்கும் மேற்பட்ட அங்காடிகள் கொண்ட பிரம்மாண்ட வளாகத்தினால் 1000கும் மேற்பட்டோர் பயனடைவர்.*
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகரில் மையப் பகுதியான பேருந்து நிலையம் எதிரே தேசிய நெடுஞ்சாலைக்கு சொந்தமான மேம்பாலத்திற்கு கீழ் பல ஆண்டுகளாக சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மலர் மாலைகள் விற்பனையாளர்கள் சிறு கடைகள் அமைத்து வாழ்வாதாரத்தை மேற்கொண்டு வந்திருந்தனர்.
இந்த நிலையில் மாநகரில் மக்கள் தொகை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ள நிலையிலும், வாகன எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்த நிலையில் போக்குவரத்து நெரிசல் கடுமையாக பொதுமக்களை பாதித்திருந்தது.
குறிப்பாக பேருந்து நிலையம் எதிரே ஏராளமான மக்கள் நடைபாதைகளை அதிகம் பயன்படுத்துவதால் மக்கள் நடமாட்டமும் நெரிசலுடன் காணப்பட்டது.
இதன் காரணமாக தேசிய நெடுஞ்சாலை துறையினர் மேம்பாலத்திற்கு கீழே கடைகள் அமைத்து மலர் மாலைகள் விற்பனை செய்து வந்தவர்கள் அப்புறப்படுத்தப்பட்டனர்.
இதன் காரணமாக பல ஆண்டுகளாக இந்த தொழிலை நம்பி வாழ்ந்து வந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் கடுமையாக பாதிக்கப்பட்டதுடன் வாழ்வாதாரமின்றி வறுமையின் பிடியில் சிக்கி தவித்தனர்.
இந்த நிலையில் ஓசூர் மலர் மாலைகள் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவரான கே டி ஆர் என அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் திம்மராஜ், இதற்காக முயற்சிகளை கடுமையாக மேற்கொண்டு வந்திருந்தார்.
அப்போது அதே பேருந்து நிலையம் எதிரே ஜே பி டி குழுமத்தில் ஒருவரான ஜெய்சங்கர் என்பதற்கு சொந்தமான நரசம்மா காம்ப்ளக்ஸ் செயல்பட்டு வந்திருந்தது.
இதை அடுத்து கே டி ஆர், ஜெய்சங்கர் என்பவரிடம் அணுகி மலர் மாலைகள் விற்பனை செய்பவர்களது நிலைமை குறித்து எடுத்துரைக்கப்பட்டு பேச்சுவார்த்தை நடைபெற்றது.
பேச்சுவார்த்தையில், நரசிம்மா காம்ப்ளக்ஸ் உரிமையாளர் ஜெய்சங்கர் பரந்த நோக்கத்துடன் மகிழ்ச்சியுடன் தனது காம்ப்ளக்ஸ் இடத்தை மலர் மாலைகள் தயாரிக்கும் விற்பனைக்காக பயன்படுத்திக் கொள்ள அனுமதி அளித்தார்.
இதனால் மலர் மாலை விற்பனை செய்யும் வியாபாரிகள் நிகழ்ந்த மகிழ்ச்சி அடைந்தனர்.
இந்த நிலையில் அந்தப் பகுதியில் மலர் மாலைகள் தயாரித்து விற்பனை செய்யும் வளாகம் அமைக்கப்பட்டு வந்திருந்தது.
இதற்காக நேற்று மாலை ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த சுயம்பு அருள்மிகு ஸ்ரீ கோட்டை மாரியம்மன் ஆலயத்தில் அம்மன் உற்சவருக்கு அலங்காரங்கள் செய்யப்பட்டு ஆராதனைகள் நடைபெற்றன.
பின்னர் பட்டாசுகள் வெடித்து வரிசை பம்பை உடுக்கை நாதஸ்வரம் உள்ளிட்ட மேள தாளங்கள் முழங்க திருக்கோயிலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீ கோட்டை மாரியம்மன் உற்சவமூர்த்தி தோளில் சுமந்து கொண்டு பக்தர்கள் மற்றும் மலர் மாலை தயாரித்து விற்பனை செய்பவர்கள் ஏராளமானோர் நகரின் பிரதான வீதிகள் வழியாக எடுத்து வந்து மலர் மாலைகள் வணிக வளாகத்தில் இறக்கி வைத்து சிறப்பு பூஜைகள் மற்றும் ஆராதனைகள் நடத்தினார்கள்.
மேலும் இரவு பாரம்பரிய நாட்டுப்புறக் கலைகளில் ஒன்றான காளியாட்டம் நிகழ்ச்சியில் காளி வேடம் அணிந்து நடனமாடி அசத்தியது பார்ப்பவர்களை வெகுவாக கவர்ந்தது.
இதைத்தொடர்ந்து இன்று காலை முக்கிய நிகழ்வான, ஓசூர் சுயம்பு அருள்மிகு ஸ்ரீ கோட்டை மாரியம்மன் மலர் மாலைகள் விற்பனை அங்காடிகள் வளாகம் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
முன்னதாக அம்மன் உற்சவம் மூர்த்திக்கு சிறப்பு அலங்காரங்களுடன் ஆராதனைகள் மற்றும் பூஜைகள் நடைபெற்றன.
தொடர்ந்து கே டி ஆர் மற்றும் ஜெய்சங்கர் உள்ளிட்ட மலர் மாலைகள் தயாரித்து விற்பனையாளர்களின் குடும்பத்துடன் சேர்ந்து, கே டி ஆரின் பேத்தியான பச்சிளம் குழந்தை சிறப்பு விருந்தினராக பங்கேற்று ரிப்பன் வெட்டி திறப்பு விழா கோலாகலமாக நடைபெற்றது.
இதன் பின்னர் அம்மனுக்கு கிடா வெட்டி வேட்டி கடன் செலுத்தி அறுசுவை உணவுகள் பரிமாறி மகிழ்ச்சியை கொண்டாடி நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்று முடிந்தது.
மலர் மாலைகள் தயாரித்து விற்பனை செய்யும் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தாரின் வாழ்வாதாரத்திற்கு உதவி செய்த ஜெய்சங்கருக்கு, கே டி ஆர் மற்றும் மலர் மாலை விற்பனையாளர்கள் சார்பில் நெஞ்சார்ந்த நன்றிகள் தெரிவித்தனர்.
இந்த வளாகத்தில் சுமார் 40க்கும் மேற்பட்ட அங்காடிகள் செயல்பட உள்ள நிலையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் மிகுந்த பயனடைவார்கள் என அப்போது அவர்கள் தெரிவித்தனர்.
பேட்டி : கே டி ஆர் @ திம்ம ராஜ், ஜி எம் ஆர்@ மூர்த்தி
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: