Manukkula Meetpin Sarithai| Bajanai Paadal|The whole Gospel in less than 30 mins|Sis. Beulah Dilipen
Автор: Beulah Dilipen
Загружено: 2026-01-03
Просмотров: 379
Описание:
❤️Jesus is the way to heaven. He is the King of kings, Lord of lords and the redeemer of the world. Believe in Him and be saved.❤️
All glory, honour and praise belong to him.
Artists credit:
Lyrics, tune, composition and main vocals: Sis. Beulah Dilipen
Backing vocals: My brother Rajkumar Frederick and my sister Cynthia Prince.
Music arrangement: Bro. Kirubakaran
Video production: Sis. Beulah Dilipen
Special thanks to Adrian, Sumanth, and Joshua
Lyrics:
Christian Bajanai Paadal- Manukkula Meetpin Sarithai
உன்னதங்களில் வீற்றிருக்கும் எங்கள் தேவ குமாரனுக்கு
ஸ்தோத்திரம் உண்டாகட்டும் எல்லா கணமும் உண்டாகட்டும்
மகிமை உண்டாகட்டும் எல்லா புகழும் உண்டாகட்டும்
1. அண்ட சராசரம் படைத்த தேவன்
நம்மையும் உண்டாக்கினார்- நம்மையும் உண்டாக்கினார்
தம் சாயலில் நம்மை சிருஷ்டித்து
ஜீவ சுவாசத்தையும் கொடுத்தார்
2. தம் சாயலில் படைத்த ஆதாம் ஏவாளை
தோட்டத்திலே வைத்தார்- ஏதேன்
அங்கே அவர்களோடே தினமும்
அவர் பேசி உலாவி வந்தார்
3. சாத்தானால் வஞ்சிக்கப்பட்டு இருவரும்
கீழ்ப்படியாமற் போனார் - தேவசாயலையும் இழந்தார்
தேவனோடே வைத்திருந்த
ஐக்கியத்தையும் இழந்தார்
4. அவர்கள் கீழ்ப்படியாமற் போனதினால்
பாவம் பெருகிற்று- உலகில்
அந்த பாவத்தோடே கூட
சாபமும் பெருகிற்று
5. பாவத்தை வெறுக்கும் பரிசுத்தரவர்
பாவியை நேசிக்கிறார் -ஆம்
நாம் பாவியாய் இருக்கும்போதே
நம்மில் அலாதி சிநேகம் வைத்தார்
6. இதனால் நியாயப்பிரமணமும்
பாவ நிவாரண பலிகளும் வந்தது - சகல பலிகளும் வந்தது
ஆயினும் பாவம் ஒழியவில்லை
கூடவே பெருகிற்று
7. நியாயப்பிரமானம் தரக்கூடாத
இரட்சிப்பை தந்திட - பெரும்
தம்மைத்தாமே ஜீவ பலியாய்
கொடுக்க சித்தம் கொண்டார்
8. தேவாதி தேவன் ராஜாதி ராஜன்
மகிமையை துறந்தார்- சர்வ
நமக்காகவே பூமியில்
தாழ்மையாய் வந்துதித்தார்
9. தீர்க்கதரிசிகள் முன்னுரைத்துச்சென்ற
வேத வார்த்தைகள் -சத்ய
தேவகுமாரனாம் இயேசுவில்
முற்றும் நிறைவேறிற்று
10. பூலோகில் ஒரு சாதாரண
மனிதனாய் வாழ்ந்தார் - தினம்
தன் முப்பதாம் வயதில் யோவானால்
ஞானஸ்நானமும் பெற்றார்
11. பரிசுத்த ஆவியின் அபிக்ஷேகத்தை
அந்நேரமே பெற்றார்- இயேசு
ஒரு மனிதனுக்கான சோதனை யாவையும்
மேற்கொண்டு வென்றார்
12. எல்லோரையும் நேசித்து
நன்மை செய்து வந்தார் - இயேசு
பரலோக ராஜ்யம் சமீபம் என்றே
பிரசங்கித்தும் வந்தார்
13. அவர் போதனையை விரும்பாத
பிரதான ஆசாரியர்- வேதபாரகர்
தேவ சித்தத்தின்படி அவரை
சிலுவையில் அறைந்தார்
14. சிலுவையின் மரணபரியந்தம்
தம்மை தாழ்த்தினார் - இயேசு
தம்மை சிலுவையிலே அறைந்தவர்க்காய்
பரிந்து பேசினார்
15. பிதாவினிடத்தில் தன் ஜீவனை
ஒப்புக்கொடுத்தார் - சிலுவையில்
வேத வாக்கின்படி மூன்றாம் நாள்
உயிரோடெழுந்தார்
16. உயிர்த்தெழுந்த பின்பு தன்னை
எல்லா ஜனத்துக்கும் - அங்கே
இயேசு நாற்பது நாளளவும்
வெளிப்படுத்தினார்
17. பிதாவின் சித்தத்தை நிறைவேற்றி
முடித்த பிற்பாடு -எல்லாம்
வெற்றியோடு பரமேறி
பிதாவாண்டை அமர்ந்தார்
18. நமக்கென்று ஒரு ஸ்தலத்தை
ஆயத்தம் செய்த பின்பு -இயேசு
நம்மையும் அங்கே கூட்டிச்செல்ல
மீண்டும் வருவார்
19. இத்தனை பெரிய இரட்சிப்பை நாம்
அற்பமாய் எண்ணாமல்- ஒருபோதும்
கிருபையினால் விசுவாசித்து
இரட்சிப்பை பெறுவோம்
20. விசுவாசித்து அவரை
ஏற்றுக்கொள்ளும் யாவரும் -ஏற்றுக்கொள்ளும் யாவரும்
தேவ புத்திரராக அவர்க்கு
அதிகாரம் கொடுத்தார்
21. இயேசு கிறிஸ்துவின் இரத்தம் ஒன்றே
பரிசுத்தமாக்கும்- நம்மை
மீண்டும் தேவனோடே ஐக்கியம் கொள்ளும்
பரிசுத்தராக்கும்
22. முதல் வருகையில் ஏழைக்கோலம்
எடுத்துவந்த தேவன் -தேவாதி தேவன்
மீண்டும் திரும்பி வருகிறார்
நியாயாதிபதியாய்
23. அவர் வருகையில் கிறிஸ்துவுக்குள்ளாய்
மரித்த யாவரும்- முதல் உயிர்த்தெழுந்திடுவார்
கிறிஸ்துவோடு ஆயிரம் வருஷம்
அரசான்றிடுவார்
24. ஆயிரம் வருஷம் முடிந்தபின்பு
மரித்தோர் யாவரும் -மற்ற
தங்கள் கிரியைகளுக்கு தக்க
நியாயத்தீர்ப்படைவார்
25. பழைய வானமும் பழைய பூமியும்
ஒளிந்து போகும் -ஆமென்
புதிய வானமும் புதிய பூமியும்
சிரிஷ்டிக்கப்பட்டுவிடும்
26. ஜீவ புஸ்தகத்தில் பேர்
எழுதப்பட்ட யாவரும் - பரிசுத்தர் கூட்டம்
பரலோகில் தேவனோடு
காலமெல்லாம் வாழுவார்
27. ஜீவ புஸ்தகத்தில் பேர்
எழுதப்படாத யாவரும் - இரட்சிக்கப்படாத யாவரும்
அக்கினி கந்தகம் எரியும் நரகத்தில்
பங்கடைவார்கள்
28. அவர் ராஜ்யத்திற்கு முடிவிராது
என்றென்றும் நிலைக்கும் -அது
நித்ய நித்தியமாய் அவரோடே
நாமும் வாழுவோம்
29. பரலோகம் செல்லும் வழி
இயேசு ஒருவரே -அதின் வாசலும் அவரே
இயேசுவையே பின்பற்றி நித்திய ஜீவனை
கண்டிடுவோம்
30. பரலோகமோ நரகமோ நீ
எதை தெரிந்துக்கொள்வாய் -நீ
இதை முடிவு செய்யும் பொறுப்பை
உன் கைகளில் விட்டு விட்டார்
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: