ycliper

Популярное

Музыка Кино и Анимация Автомобили Животные Спорт Путешествия Игры Юмор

Интересные видео

2025 Сериалы Трейлеры Новости Как сделать Видеоуроки Diy своими руками

Топ запросов

смотреть а4 schoolboy runaway турецкий сериал смотреть мультфильмы эдисон
Скачать

Pamban Bridge | நாட்டிலேயே இதுதான் முதல் பாலம்... புதிய Pamban Bridge-ன் வியக்க வைக்கும் தகவல்கள்

Автор: Thanthi TV

Загружено: 2025-04-04

Просмотров: 136964

Описание: #PMModi | #PambanBridge | #rameshwaram

நாட்டிலேயே இதுதான் முதல் பாலம்... புதிய Pamban Bridge-ன் வியக்க வைக்கும் தகவல்கள்

பிரதமர் மோடி திறந்து வைக்க இருக்கும் புதிய பாம்பன் ரயில் பாலத்தில் இருக்கும் சிறப்புகளை பார்க்கலாம்.

பாம்பன் ரயில் பாலம்... தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும் விஷயங்களில் ஒன்று. இந்திய பெருநிலப்பரப்பையும் ராமேஸ்வரம் தீவையும் இணைக்கும் பாலம், ஆங்கிலேயர் ஆட்சியில் இந்தியா - இலங்கை இடையே போக்குவரத்தை தொடங்கும் திட்டத்தில் உதித்தது.

1913-ல் கட்டி முடிக்கப்பட்ட இந்தியாவின் முதல் கடல் ரயில் பாலம் 1914 ஆம் ஆண்டு பயன்பாட்டுக்கு வந்தது. பாலத்திற்கு மத்தியில் கப்பல் செல்வதற்காக கத்திரி வடிவில் தூக்குப்பாலம் அமைக்கப்பட்டிருந்தது.

பல்வேறு இயற்கை சீற்றங்களை தாண்டி நூற்றாண்டுக்கு மேலாக செயல்பாட்டில் இருந்த பாலத்தில், அடிக்கடி தொழில்நுட்பப் பிரச்சினைகள் ஏற்பட்டது மட்டுமின்றி பாலத்தில் விரிசல் விழுந்ததாலும் புதிய பாலம் கட்டும் பணிகள் 2019 ஆம் ஆண்டு தொடங்கியது.

கப்பல் செல்லும் தூக்குப்பால பகுதியில் ரயில் செல்லும் போது அதிர்வுகள் இருப்பது கண்டறியப்பட்டது. பிறகு ஆய்வு செய்யப்பட்டு 2022 ஆம் ஆண்டு பாலத்தில் ரயில் சேவை நிறுத்தப்பட்டது.

அதேவேளையில் பழைய பாலத்திற்கு அருகாமையிலேயே புதிய ரயில் பாலம் கட்டும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டது.

இந்நிலையில் 535 கோடி ரூபாய் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்டுள்ள பாலம் பயன்பாட்டுக்கு வருகிறது. பாலம் பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்டிருக்கிறது.

புதிய ரயில் பாலம் பாலம் 2 ஆயிரத்து 78 மீட்டர் நீளம் கொண்டது. கடல் மட்டத்திலிருந்து 6 மீட்டர் உயரம் கொண்டது. 333 கான்கிரீட் அடித்தளங்கள், 101 தூண்களும், 99 இணைப்பு கர்டர்களையும் கொண்டது.

லண்டன் டவர் bridge வடிவில் கட்டப்பட்டிருக்கும் பாலத்தில் நாட்டிலேயே முதல் செங்குத்து தூக்குப்பாலம் அமைக்கப்பட்டு இருக்கிறது.

செங்குத்து தூக்குப் பாலத்தின் உயரம் 27 மீட்டராகும். நீளம் 77 மீட்டராகும். ஆயிரத்து 470 டன் எடையுள்ள நான்கு இரும்பு தூண்களில் 650 டன் எடையில் தூக்குப்பாலம் இணைக்கப்பட்டு இருக்கிறது.

இது நான்கு புறமும் உள்ள இரும்பு ரோப்களில் இணைக்கப்பட்டுள்ளது. மொத்தம் 24 இரும்பு ரோப்கள் செங்குத்து தூக்குப்பாலத்தை பிடித்திருக்கிறது.

வின்ச் மோட்டார் தொழில்நுட்பத்தில் தூக்குப்பாலம் 17 மீட்டர் உயரத்தில் மேலே உயர்த்தப்படும். இயந்திரத்தில் இயக்குவதால் ஐந்து நிமிடத்தில் உயர்த்தி இறக்க முடியும்.

ரயில் இயங்கும் மின்வயர் இணைப்புகள் உயர்த்தி இறக்கும்போது தானாக இணைப்பில் இருந்து விலகும். சிறிய படகுகள் பாலம் திறக்காமலேயே கடந்து செல்லலாம். தூக்குப்பாலம் உச்சிக்கு செல்ல லிப்ட் வசதி இருக்கிறது.

பாலம் அருகே 2 மாடி கட்டடத்தில் ஆப்ரேட்டர் அறை, டிரான்ஸ்பார்மர் அறை, மின்சார கேபிள் உள்ளிட்ட சாதனங்கள் வைப்பதற்கான அறைகள் கட்டப்பட்டுள்ளன.

புதிய ரயில் பாலத்தின் கான்கிரீட் தூண்களின் மேலே மொத்தம் 99 இணைப்பு இரும்பு கர்டர்கள் பொருத்தப்பட்டு இருக்கிறது.

இரும்பு கட்டுமான பணிக்கு துருப்பிடிக்காத எஃகு உலோகம், உப்புக்காற்றில் துருப்பிடிக்காத வகையில் பெயின்ட் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.

நூற்றாண்டு கடந்த பழைய ரயில் பாலத்தில் 10 கிலோ மீட்டர் வேகம் வரை ரயில்கள் இயக்கப்பட்டது.

புதிய ரயில் பாலம் நவீன தொழில்நுட்பத்தில் வலுவான கட்டமைப்பில் கட்டப்பட்டு இருப்பதால் 80 கிலோ மீட்டர் வேகம் வரையில் ரயிலை இயக்கலாம். தூக்கு பாலம் பகுதியில் 50 கிலோ மீட்டர் வேகத்தில் ரயிலை இயக்கலாம். பழைய பாலத்தை கடக்க 25, 30 நிமிடங்கள் ஆன வேளையில், புதிய பாலத்தை 5 நிமிடங்களுக்குள் கடந்துவிட முடியும்.

புதிய ரயில் பாலத்தில் மின்சார அதிவேக ரயில்களை பாதுகாப்பாக இயக்க, அதிர்வுகளை குறைக்க வலுவான புதிய தண்டவாளங்கள் பொருத்தப்பட்டு இருக்கிறது.

பழைய பாலம் ஒருவழித்தடமாக இருந்தது. இப்போது இருவழித்தடமாக பாலம் கட்டப்பட்டு இருக்கிறது. இருப்பினும் ஒரு வழியில் மட்டுமே ரயில் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. பயன்பாட்டுக்கு வரும் புதிய பாலத்தால் லட்சக்கணக்கான பக்தர்கள் பயனடைவார்கள்.

Uploaded On 04.04.2025

SUBSCRIBE to get the latest news updates : https://bit.ly/3jt4M6G

Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : http://www.thanthitv.com/
Like & Follow us on FaceBook -   / thanthitv  
Follow us on Twitter -   / thanthitv  
Follow us on Instagram -   / thanthitv  

Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is http://www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.

The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.

So catch all the live action on Thanthi TV and write your views to [email protected].

ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news

Не удается загрузить Youtube-плеер. Проверьте блокировку Youtube в вашей сети.
Повторяем попытку...
Pamban Bridge | நாட்டிலேயே இதுதான் முதல் பாலம்... புதிய Pamban Bridge-ன் வியக்க வைக்கும் தகவல்கள்

Поделиться в:

Доступные форматы для скачивания:

Скачать видео

  • Информация по загрузке:

Скачать аудио

Похожие видео

Sun Seithigal | சன் மாலை செய்திகள் | 11-01-2026 | Evening News | Sun News

Sun Seithigal | சன் மாலை செய்திகள் | 11-01-2026 | Evening News | Sun News

🔴LIVE : ஆதாரங்களை வெளியிடுவேன் ஜெயலட்சுமி பரபரப்பு பேட்டி..! Jayalakshmi | ADMK | EPS | IBC Tamil

🔴LIVE : ஆதாரங்களை வெளியிடுவேன் ஜெயலட்சுமி பரபரப்பு பேட்டி..! Jayalakshmi | ADMK | EPS | IBC Tamil

இனி கப்பலுக்கு கம்ப்யூட்டரும் பாலமும் சேர்ந்து வழிவிடும்; New Pamban Bridge-ல் என்ன சிறப்பு?

இனி கப்பலுக்கு கம்ப்யூட்டரும் பாலமும் சேர்ந்து வழிவிடும்; New Pamban Bridge-ல் என்ன சிறப்பு?

🔴LIVE : Deputy CM Udhayanidhi Stalin Speech | துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

🔴LIVE : Deputy CM Udhayanidhi Stalin Speech | துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

இரவு 7:00 மணி டிடி தமிழ் செய்திகள் [11.01.2026] | PM Modi | Viksit Bharat G RAM G

இரவு 7:00 மணி டிடி தமிழ் செய்திகள் [11.01.2026] | PM Modi | Viksit Bharat G RAM G

Street Interview |

Street Interview | "உதவித்தொகை பத்தல, அதிகமா கொடுத்தா நல்ல இருக்கும்" - மக்கள் வேண்டுகோள்

🔴LIVE : மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர் சந்திப்பு | Vaiko | Press Meet

🔴LIVE : மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர் சந்திப்பு | Vaiko | Press Meet

Самые УДИВИТЕЛЬНЫЕ Мосты в Мире

Самые УДИВИТЕЛЬНЫЕ Мосты в Мире

ЛИПСИЦ: ИНТЕРВЬЮ АЛЕКСАНДРУ ДЕМЧЕНКО 06.01.2026

ЛИПСИЦ: ИНТЕРВЬЮ АЛЕКСАНДРУ ДЕМЧЕНКО 06.01.2026

பூங்கொத்து கொடுத்த அண்ணாமலை உடனே பிரதமர் மோடியின் ரியாக் ஷன்..!! #BREAKING

பூங்கொத்து கொடுத்த அண்ணாமலை உடனே பிரதமர் மோடியின் ரியாக் ஷன்..!! #BREAKING

Великая Китайская стена: правдивая история невозможной стены

Великая Китайская стена: правдивая история невозможной стены

🔴LIVE : தமிழகத்தில் பிரதமர் மோடி | PM Modi Tamilnadu Visit today live from Rameshwaram

🔴LIVE : தமிழகத்தில் பிரதமர் மோடி | PM Modi Tamilnadu Visit today live from Rameshwaram

🔴LIVE : பிரமாண்ட ரயில் பாலம் நாட்டுக்கு அர்ப்பணிக்கும் பிரதமர் மோடி | Tamil Janam

🔴LIVE : பிரமாண்ட ரயில் பாலம் நாட்டுக்கு அர்ப்பணிக்கும் பிரதமர் மோடி | Tamil Janam

பிரபாகரன் உடல் எங்கே? பிபிசியிடம் கருணா சொன்ன பதில் | Karuna Amman & Pillaiyan விரிவான நேர்காணல்

பிரபாகரன் உடல் எங்கே? பிபிசியிடம் கருணா சொன்ன பதில் | Karuna Amman & Pillaiyan விரிவான நேர்காணல்

''பொறியியல் துறையின் அதிசயம் பாம்பன் பாலம்'' | PM Modi | Government Scheme | Polimer news |

''பொறியியல் துறையின் அதிசயம் பாம்பன் பாலம்'' | PM Modi | Government Scheme | Polimer news |

ТОП 10 САМЫХ ОГРОМНЫХ САМОЛЁТОВ В МИРЕ | Гиганты авиации, о которых ты не знал!

ТОП 10 САМЫХ ОГРОМНЫХ САМОЛЁТОВ В МИРЕ | Гиганты авиации, о которых ты не знал!

Самые Опасные Дороги в Мире, По Которым Вы Не Захотите Проехать

Самые Опасные Дороги в Мире, По Которым Вы Не Захотите Проехать

Thee Paravattum : வஞ்சப்புகழ்ச்சியால் விளாசிய கோவி.லெனின் | Govi lenin speech

Thee Paravattum : வஞ்சப்புகழ்ச்சியால் விளாசிய கோவி.லெனின் | Govi lenin speech

Giant Wood Processing Factory Processes Thousand Year Old Trees | An Amazing Sight, Danger Lurks

Giant Wood Processing Factory Processes Thousand Year Old Trees | An Amazing Sight, Danger Lurks

Я Бы И Сам Не Поверил, Но Это Видео Удалось Снять На Камеру. Случаи с Поездами 1 на 1000000

Я Бы И Сам Не Поверил, Но Это Видео Удалось Снять На Камеру. Случаи с Поездами 1 на 1000000

© 2025 ycliper. Все права защищены.

  • Контакты
  • О нас
  • Политика конфиденциальности

Контакты для правообладателей: [email protected]