பழமையான மரச் செக்கு எண்ணெய் ஆலை | 150 Years Old Marachekku Oil | Hello Madurai | App | TV | FM |
Автор: Hello Madurai
Загружено: 2021-05-07
Просмотров: 6950
Описание:
இன்றைக்கு உண்ணும் உணவுப் பொருட்கள் அனைத்திலும் கலப்படம் புகுந்துவிட்டது. அதேபோல் விற்பனை விலையும் அவரவர்களுக்கு ஏற்றார்போல் ஏற்றிக் கொள்கின்றனர். ஒரு நல்ல உணவுப் பொருளை சாமானிய மக்கள் உண்பது என்பது சவாலான விசயம். ஆனால் அதை எல்லாம் உடைத்து 150 ஆண்டுகளுக்கும் மேலாக மக்களுக்கு சேவையாக வழங்கி வருகின்றனர் கோவிந்தன் செயட்டியார் மரச் செக்கு எண்ணெய் ஆலை குடும்பத்தினர்.
4 தலைமுறைகளை தாண்டி செக்கு எண்ணெய் விற்பனையில் தங்களுக்கு என தரத்தையும், ஞாயமான விலையையும் மக்களுக்கு வழங்கி வருகின்றனர். மரச் செக்கு என்ற பெயரில் கலப்பட எண்ணெய்யை அளவுக்கு அதிக விலையில் விற்கும் காலகட்டத்தில், உயர்தரமான எண்ணெய்களை சாதாரண பொதுமக்களும் வாங்கும் அளவிற்கு விற்பனை செய்து வருகின்றனர் இக்குடும்பத்தினர்.
குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே தொழிலாளர்காள பணி புரிவதத பரம்பரை பரம்பரையாக வைத்து வருகின்றனர். எடுத்துக்காட்டுக்கு இக்குடும்பத்தின் 5வது தலைமுறையாக இவர்களது குழந்தைகள் மரச்செக்கு தொழிலில் ஈடுபடுவதை நாங்களே ஆச்சர்யமாக பார்த்தோம்.
அந்த காலத்தில் எண்ணெய் விற்பனையில் கொடிகட்டி பறந்த இந்த மரச் செக்கு எண்ணெய் ஆலையானது மதுரை சமயநல்லூர் பகுதியில் உள்ள செக்கடித் தெருவில் கோவிந்தன் செயட்டியார் மரச் செக்கு எண்ணெய் என்ற பெயரில் அமைந்துள்ளது. 150ஆண்டு காலமாக இதே இடத்தில்தான் உள்ளது. இந்த தெருவிற்கு செக்கடி தெரு என்ற பெயர் வருவதற்கு இக்குடும்பமே காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.
பணம் மட்டுமே சம்பாரிக்கும் நோக்கத்தில் இருக்கும் பலருக்கும் மத்தியில், நல்ல தரமான உணவு பொருட்களை வழங்க வேண்டும் என்று ஒரு குடும்பமே உழைப்பில் இறங்கி செயல்படுவது பாராட்டுக்குரிய ஒன்று. அதேபோல் கடந்த ஆறு ஆண்டுகளாகத்தான் மரச் செக்கு புத்துயிர் பெற்றுள்ளது. அதுவரை இக்குடும்பம் அந்த தொழிலை தொடர்ந்து நடத்த பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
நீண்ட நாள் கோரிக்கைக்கு பிறகு கோவிந்தன் செயட்டியார் மரச் செக்கு எண்ணெய் எடுக்க எங்களுக்கு அனுமதி கிடைத்தது. ஆக பெரும் மகிழ்ச்சி நிச்சயமுண்டு. நல்ல உணவு பொருளை உங்களுக்கு நாங்கள் அறிமுகம் செய்ததில்.
பழமை மாறாத பாரம்பரியமான தேங்காய் எண்ணெய், நல்ல எண்ணெய், கடலை எண்ணெய் ஆகியவற்றை குறைந்த விலையில் வாங்கி, ஆரோக்கியமாக வாழுங்கள். இந்த வீடியோ பலரிடமும் சென்றடைய பகிருங்கள், இக்குடும்பத்தை வாழ்த்துங்கள். நான்காவது தலைமுறையாக இயங்கி வரும் உயர்திரு. செந்தில் குமார் அவர்களுக்கு எங்களது நெஞ்சார்ந்த பாராட்டுக்கள். தொடருங்கள் சாமானிய மக்களுக்கான சேவையை.
நன்றிகள் !!
கோவிந்தன் செயட்டியார் மரச் செக்கு எண்ணெய் தொடர்பு எண்: 80723 44691
_________________________________________________________
இதுபோல் உங்கள் தொழில் சார்ந்த வீடியோக்கள் எடுக்க நீங்கள் எங்களை அழைக்க வேண்டிய அலைபேசி எண்:
Hello Madurai M.Ramesh - 95 66 53 1237. (Whatsapp)
_________________________________________________________
மேலும் எங்களது Hello Madurai App எனும் பிரத்யேக செயலியை கூகுல் பிளே ஸ்டோரில் இலவசமாக பதிவிறக்கம் செய்து எங்கள் வீடியோக்கள் உள்பட ஒட்டுமொத்த மதுரையையும் உள்ளங் கையில் வைத்துக் கொள்ளலாம்.
💓 App Link: https://play.google.com/store/apps/de...
💓 Facebook : / maduraivideo
💓web site :www.hellomaduraitv.com
💓web site :www.hellomadurai.in
💓web site :www.tamilvivasayam.com
💓 Telegrame Link: https://t.me/hellomadurai
_________________________________________________________
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: