புனித லூயி வைரவிழா யூபிலி பாடல்|ஆசியுரை -அருட் பணி. பேட்ரிக் இ ஜோசப் V F, பங்கு தந்தை.
Автор: John Joseph Harmonies
Загружено: 2025-08-23
Просмотров: 561
Описание:
புனித லூயி வைர விழா யூபிலி பாடல்
இயல்,இசை, வேதியர். சி. ஜான் ஜோசப். இசை இயக்கம் : சாம் லாரன்ஸ். பாடியவர்கள் : B. M. லாரன்ஸ், மெர்லின், மற்றும் கோகிலா.
ஒளி பதிவு,ஒலிகலவை. பிரவின் இம்மானுவேல்.
காணொளி தொகுப்பு : ஜிஜோ, மற்றும் ஜெப்ரி.
படல்வரிகள்
புனித லூயி ஆலயத்தின் வைர விழா யூபிலி பாடல்.
வைர விழா யூபிலி ஆண்டிதுவே அடையாரில் கோயில் கொண்டு மகிமையில் விளங்கிடும் லூயிசே உம் அரவணைப்பில் அறுபதாண்டின் யூபிலி மகிழ்வை இணைந்தே- நாங்கள் கொண்டாடி மகிழ்கின்றோம் - இறை அருளை வேண்டுகின்றோம்- 2 வாழ்க வாழ்க எங்கள் காவலரே வைர விழா ஆசிரை பெற்றுத் தாருமே -2
இயற்கை எழில் நிறைந்த இடத்தினிலே சிற்றாலயம் அழகுடன் எழுந்ததுவே இறை மக்கள் ஒன்று சேர்ந்து ஜெபித்திடவே நல்ல ஆன்மீக வழிபாடு நடந்ததுவே -2 இங்கு இறைவனின் பிரசன்னம் நிறைந்ததுவே, இறை சமூகமாய் இணைந்து வாழ்ந்தனரே அன்பியங்கள் பல உருவானதே - நல்ல செயல் திட்டம் நன்கு செய்தனரே. பிற இனத்தவரும் இங்கு ஒன்றிணைந்து இறை ஆசீரைப் பெற்று மகிழ்ந்தனரே - 2 வாழ்க வாழ்க எங்கள் காவலரே வைர விழா ஆசீரை பெற்றுத் தாருமே -2
ஆன்மீக பணிகள் மட்டுமல்ல - இங்கு சமூகப் பணிகளும் நடக்கின்றன பிணிகள் நீங்கி நற் கல்வி பயில உதவிகள் செய்து வருகின்றனர் ஏழை எளியோர் பசியார - - நல் உணவினை அளித்து வருகின்றனர் ஜெபக்குழுக்களின் உதவியாலே நற் பணிகள் நடந்தேறி வருகிறது எதிர்நோக்கின் நல்ல பணிகளையே -நாங்கள் செய்திட எமக்காய் பரிந்துரைப்பாய் - 2 வாழ்க வாழ்க எங்கள் காவலரே........
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: