மறைசாட்சி தேவசகாயம் பிள்ளை புனிதத்தலம்
Автор: Secret of Heritage
Загружено: 2025-09-15
Просмотров: 1288
Описание:
புனிதர் தேவசகாயம் (Saint Devasahayam, 23 ஏப்ரல் 1712 – 14 சனவரி 1752) இந்தியக் கத்தோலிக்கப் புனிதர் ஆவார். இவர் கன்னியாகுமரியில் இந்துக் குடும்பம் ஒன்றில் 18-ஆம் நூற்றாண்டில் பிறந்தவர். நீலகண்டன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் திருமுழுக்குப் பெற்றபோது, "லாசரசு" (Lazarus) என்பதன் தமிழ் பதமான "தேவசகாயம்" என்ற பெயரைப் பெற்றார். உயர் வகுப்பைச் சேர்ந்த இந்துக்கள் கிறித்தவத்தை தழுவக்கூடாது என்ற அன்றைய திருவாங்கூர் மன்னரின் கட்டளையை மீறி மதம் மாறியதால் இவர் கொலை செய்யப்பட்டதாக நம்பப்படுகிறது.தேவசகாயம் இறந்த இடம் இன்று தேவசகாயம் மவுண்ட் என்றும், ஆரல் குருசடி என்றும் அழைக்கப்படுகிறது. கத்தோலிக்கத் திருச்சபை 2012 திசம்பரில் இவருக்கு அருளாளர் பட்டம் வழங்கி சிறப்பித்தது.][திருத்தந்தை பிரான்சிசு தேவசகாயத்தை 2022 மே 15 அன்று ஒரு புனிதராக அறிவித்தார்
இந்நிலையில் 1741இல் குளச்சல் துறைமுகத்தைப் பிடிக்க வந்த டச்சு படைகள் மார்த்தாண்ட வர்மாவின் படைகளால் தோற்கடிக்கப்பட்டன. டச்சு படைத்தலைவரான கத்தோலிக்க மதத்தைச் சார்ந்த பெனடிக்டுஸ் தே டிலனாய் (Benedictus De Lennoy), அவருடைய படைகளுடன் சிறைப்பிடிக்கப்பட்டார். பின்னர் டிலன்னாயை தமது படையின் ஆலோசகராக மார்த்தாண்ட வர்மா நியமித்ததால், அவர் நீலகண்ட பிள்ளையின் நண்பரானார். ஒருநாள் நீலகண்ட பிள்ளை மிகுந்த கவலையில் இருந்ததைக் கண்ட டிலன்னாய், அதற்கான காரணத்தைக் கேட்டார். அதற்கு நீலகண்டன், தமது குடும்பத்துக்கு சொந்தமான கால் நடைகள் இறந்து போவதும், பயிர்கள் நாசம் அடைவதும் தொடர்கதையாகி பொருளாதார ரீதியாகப் பெரும் இழப்பை சந்தித்து வருவதாக தெரிவித்தார்.
அப்போது திருவிவிலியத்தில் உள்ள யோபுவின் கதையை டிலன்னாய் சொல்லி, நீலகண்டனுக்கு கிறித்தவ சமயத்தை அறிமுகம் செய்து வைத்தார். தொடர்ந்து இயேசு கிறிஸ்துவைப் பற்றி அவரிடம் கேட்டு தெரிந்துகொண்ட நீலகண்டன், நாளடைவில் திருமுழுக்குப் பெற்று கிறித்தவராக விருப்பம் கொண்டார்.திருநெல்வேலி மாவட்டத்தின் வடக்கன்குளம் கத்தோலிக்க தேவாலயத்தின் பங்குத்தந்தையாகப் பணிபுரிந்த ஜோவான்னி பத்தீஸ்தா புத்தாரி (Giovanni Battista Buttari) நீலகண்ட பிள்ளைக்குத் திருமுழுக்கு வழங்கி, "இலாசர்" (Lazarus) என்பதற்கு நிகரான "தேவசகாயம்" என்னும் பெயரைச் சூட்டினார்.[6] கத்தோலிக்க மதத்திற்கு மாறியதும் தேவசகாயம் பிள்ளை பலரிடமும் இயேசு கிறித்துவை பற்றிப் போதித்து, பலரை கிறிஸ்தவ மதத்திற்கு மனம் மாற்றினார். இவரது மனைவி இலந்தவிளை அருகே உள்ள குஞ்சு வீட்டு நாயர் சமுதாயத்தை சார்த்த பார்கவி அம்மாள் ஆவார். அவரும் "ஞானப்பூ" எனும் பெயருடன் திருமுழுக்கு பெற்று கத்தோலிக்க கிறித்தவர் ஆனார்.#கன்னியாகுமரி #churchonline #கோட்டாறுமறைமாவட்டம் #செயிண்ட் சேவியர் #saint #saints #velankanni #catholic #catholicchurch #catholicism
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: