பம்மல் 5-வதுவார்டில் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்
Автор: EXPRESS NEWS 247
Загружено: 2026-01-19
Просмотров: 231
Описание:
புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்களின் 109- வது ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு
தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பம்மல் அதிமுக கழக வடக்கு பகுதி செயலாளர் மற்றும் தாம்பரம் மாநகராட்சி ஐந்தாவது மாமன்ற உறுப்பினர்
வே ஜெகநாதன், அவர்கள் தலைமையில் புரட்சித் தலைவர் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது..
இதில் ஐந்தாவது வட்டக் கழக மேற்கு செயலாளர் வின்சென்ட் விவேக் வரவேற்புரை ஆற்றினார்.
அவைத்தலைவர், முன்னாள் கவுன்சிலர்
D. தண்டபாணி, மற்றும் மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர்
பி ஆர் எஸ் சரவண ராஜ், அவர்கள் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்ட முன்னாள் எம்எல்ஏ மற்றும் மாவட்ட கழக துணைச் செயலாளர் ப.தன்சிங் அவர்கள் ஐந்தாவது வார்டு பகுதியில் அதிமுக கொடிகளை ஏற்றி அன்னதானம், வழங்கி இனிப்புகளை வழங்கினார்.
இதில் 700 க்கும் மேற்பட்ட ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டன.
மேலும் நிகழ்ச்சியில் மாவட்ட பிரதிநிதி, ஆரோக்கியசாமி, மற்றும் வட்ட கழக செயலாளர்கள் விநாயகம், வின்சென்ட் விவேக், வழக்கறிஞர் லோகநாதன், மகளிர் அணி செயலாளர் மேரி உஷா,
அம்மா பேரவை செயலாளர் சிட்டிபாபு, தலைவர் மூர்த்தி, தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ராஜாராம், அம்மா பேரவை இணை செயலாளர் மணிகண்டன், மாணவரணி செயலாளர் ரமேஷ், பாசறை செயலாளர் விக்னேஷ் பாண்டியன், அண்ணா தொழிற்சங்க இணை செயலாளர் ரமேஷ்குமார்,
மற்றும் கழக நிர்வாகிகள் அலிமா ரஹ்மான், வேதா சக்கரவர்த்தி, சைதை மணி, என் சி கே ரமேஷ், டபள்யூ ஆர் சக்கரவர்த்தி,
பி ஜெய குமார், சுரேஷ், ஐயப்பன்,பார்த்திபன், ஆகியோர் கலந்து கொண்டு புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வணங்கினார்கள்..
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: