தானம் செய்வதின் பலன்கள்
Автор: WINBALASUBRAMANIAN
Загружено: 2024-11-17
Просмотров: 70
Описание:
தானம் செய்வதின் பலன்கள்
உடல் நலிவுற்றோர்கள் மற்றும் இயலாத சூழலில் வாழ்பவர்க்கு நம்மால் முடிந்த உதவிகளை செய்து, நாம் அவர்களின் இன்பங்களின் மூலம் எங்கும் நீக்கமற நிறைந்துள்ள பரம்பொருளான இறைவனை காண்போம். நம் சக்திக்கு இயன்ற அளவு தான தர்மங்களை செய்து நாமும் வாழ்ந்து மற்றவர்களையும் வாழ வைப்போம்.
பல்வேறு வகையான தானங்களும் அவற்றின் பலன்களும் பற்றி கீழே பட்டியலிடப்பட்டுள்ளன:தானத்தின் பலன்கள்
அன்ன தானம் கடன் தொல்லைகள் நீங்கும்
அரிசி தானம் முன்ஜென்ம பாவங்கள் விலகும்
ஆடைகள் தானம் சுகபோக வாழ்வு அமையும்
பால் தானம் துன்பங்கள் விலகும்
நெய் தானம் பிணிகள் நீங்கும்
தேங்காய் தானம் எடுத்த காரியங்களில் வெற்றிகள் கிட்டும்
தீப தானம் முன்னோர்களின் ஆசிகள் கிட்டும்
தேன் தானம் புத்திர பாக்கியம் கிட்டும்
பூமி தானம் பிறவா நிலை உண்டாகும்
பழங்கள் தானம் மன அமைதி உண்டாகும்
வஸ்திர தானம் ஆயுள் விருத்தி உண்டாகும்
கம்பளி தானம் வெண்குஸ்ட நோய்களின் அறிகுறிகள் தென்பட்டால் அதிலிருந்து மீண்டு விடலாம்
கோ தானம் பித்ரு கடன் நீங்கும்
தயிர் தானம் இந்திரிய விருத்தி உண்டாகும்
நெல்லிக்கனி தானம் அறிவு மேம்படும்
தங்கம் தானம் தோஷம் நிவர்த்தியாகும்
வெள்ளி தானம் கவலைகள் நீங்கும்
கோதுமை தானம் ரிஷிக்கடன் அகலும்
எண்ணெய் தானம் ஆரோக்கியம் உண்டாகும்
காலணி தானம் பெரியோர்களை அவமதித்த பாவம் போக்கும்
மாங்கல்ய சரடு தானம் தீர்க்க மாங்கல்ய பலன் உண்டாகும்
குடை தானம் எண்ணிய எதிர்காலம் உண்டாகும்
பாய் தானம் அமைதியான மரணம் உண்டாகும்
காய்கறிகள் தானம் குழந்தை ஆரோக்கியம் மேம்படும்
பூ தானம் விரும்பிய இல்வாழ்க்கை அமையும்
பொன் மாங்கல்ய தானம் திருமண தடைகள் நீங்கும்
மஞ்சள் தானம் சுபிட்சம் உண்டாகும்
எள் தானம் சாந்தி உண்டாகும்
வெல்ல தானம் வம்ச விருத்தி உண்டாகும்
தண்ணீர் தானம் மன மகிழ்ச்சி உண்டாகும்
சந்தன தானம் கீர்த்தி உண்டாகும்
புத்தகம் தானம் கல்வி ஞானம் உண்டாகும்
பல்வேறு பாபங்களை தெரிந்தோ தெரியாமலோ செய்யும் மனிதன், ஒரு கட்டத்தில் திருந்தும் போது, அவன் முன்னர் செய்த பாபங்களை அவற்றின் தன்மைக்கேற்ப மன்னித்து அருள் செய்ய அவன் ஊழ்வினையை மாற்ற தானங்கள் உதவுகின்றன. ஆரம்பத்தில் பலன் கருதி செய்யும் தானம், நாளடைவில் பலன் கருதாமல் செய்யக்கூடிய உன்னத நிலைக்கு சென்றுவிடும்.
ஒருவர் கஷ்டத்தில் இருக்கிறார் என்று தெரிந்தால் அவர் என்ன ஜாதி, என்ன மதம், நல்லவரா? கெட்டவரா? என்றெல்லாம் ஆராய்ச்சி பண்ணிக் கொண்டிருக்காமல், யாராயிருந்தாலும், எப்படிப் பட்டவராயிருந்தாலும் நம்மாலான உதவியை செய்து அவர்கள் கஷ்டம் தீர்க்க முயற்சிக்க வேண்டும் என்று சாஸ்திரம் சொல்கிறது.
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: