*கோவில்பட்டியில் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு வெகு விமர்சையாக நடைபெற்ற ஊர்வலம்
Автор: Aanmeega seithigal
Загружено: 2025-08-27
Просмотров: 708
Описание:
கோவில்பட்டியில் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு வெகு விமர்சையாக நடைபெற்ற 1008 பால்குடம் மற்றும் முளைப்பாரி ஊர்வலம்
தேச ஒற்றுமையை வலியுறுத்தி தெய்வங்கள் வேடமணிந்து தேசியக் கொடியுடன் ஊர்வலத்தில் கலந்து கொண்ட குழந்தைகள்
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் 1008 பால் குடம் மற்றும் முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது. தேச ஒற்றுமை வலியுறுத்தி குழந்தைகள் சிவன், பார்வதி, விநாயகர், முருகர் என சுவாமி வேடங்கள் அணிந்து தேசியக்கொடியுடன் ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி புது கிராமத்தில் உள்ள இல்லத்துப் பிள்ளைமார் சமூகத்திற்கு பாத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீ சக்தி விநாயகர் திருக்கோவிலில் விநாயகர் சதுர்த்தி திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டும் வெகு விமர்சியாக நடைபெற்றது.
விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு கோவில்பட்டி ரயில்வே நிலையத்திலிருந்து 1008 பால் குடம் மற்றும் முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது.முன்னாள் அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் செ.ராஜூ ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.தேச ஒற்றுமை வலியுறுத்தி குழந்தைகள் சிவன், பார்வதி, விநாயகர், முருகர் என சுவாமி வேடங்கள் அணிந்து தேசியக்கொடியுடன் ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். மேளதாளம் முழங்க சிலம்பாட்டத்துடன் ரயில்வே நிலையத்திலிருந்து தொடங்கிய ஊர்வலம் புதுக்கிராமம் ஸ்ரீ சக்தி விநாயகர் திருக்கோவிலில் நிறைவு பெற்றது. பின்னர் சக்தி விநாயகருக்கு பால் அபிஷேகம் உள்ளிட்ட 21 வகையான அபிஷேகங்கள் நடத்தப்பட்டு, அலங்காரம் மற்றும் மகா தீபாரதனை நடந்தது. விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: