தீனோரே நியாயமா மாறலாமா ..|| Deenore Niyayama Maaralama | Singers : Mohammed Kasim & Smaila Jenu Mol
Автор: Hajith Ibrahim
Загружено: 2024-01-26
Просмотров: 120513
Описание:
தீனோரே நியாயமா மாறலாமா
தூதர் நபி போதனையை மீறலாமா
உள்ளம் சோரலாமா
தீனோரே நியாயமா ..!
****************************************************************************
கலைமாமணி கவிஞர் நாகூர் சலீம் அவர்கள் எழுதிய பாடல்.
இசை முரசு E.M.நாகூர் ஹனிபா மற்றும் K.ராணி இணைந்து பாடிய "தீனோரே நியாயமா மாறலாமா" என்ற பாடல் முகம்மது காசிம் மற்றும் ஸ்மைலா குரலில்.
****************************************************************************
LYRICS:
தீனோரே நியாயமா மாறலாமா
தூதர் நபி போதனையை மீறலாமா
உள்ளம் சோரலாமா
தீனோரே நியாயமா ..!
1
கானல் நீராகும் புவிவாழ்வு இங்கே
அது கரைசேரும் ஒரு நாளில் அங்கே
தீனை உணராமலே திரும்பி பாராமலே
இந்த தரை மீது தடுமாறி தேயலாமா
தீனோரே நியாயமா மாறலாமா
தூதர் நபி போதனையை மீறலாமா
உள்ளம் சோரலாமா
தீனோரே நியாயமா ..!
2
வாசல் வழியோரம் கையேந்தி நின்று
கெஞ்சும் எளியோரின் துயர்க்கோலம் கண்டு
நெஞ்சம் இறங்காமலே கொஞ்சம் வழங்காமலே
நாவு கூசாமல் நிலைமாறி ஏசலாமா
தீனோரே நியாயமா மாறலாமா
தூதர் நபி போதனையை மீறலாமா
உள்ளம் சோரலாமா
தீனோரே நியாயமா ..!
3
வட்டித் தொழிலாலே கிடைக்கின்ற லாபம்
ஏழை விழிநீரில் எரிகின்ற தீபம்
என்று அறியாமலே நன்று புரியாமலே
ஏக இறையோனின் நெறியிழந்து வாழலாமா
தீனோரே நியாயமா மாறலாமா
தூதர் நபி போதனையை மீறலாமா
உள்ளம் சோரலாமா
தீனோரே நியாயமா ..!
***************************************************************************
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: