ரோம் பயண அனுபவம் கற்றுக் கொடுத்தது! Rome travel experience has taught me!
Автор: Mohamed Ali Abdul kader
Загружено: 2022-12-09
Просмотров: 17
Описание:
ரோம் பயண அனுபவம் கற்றுக் கொடுத்தது!
Rome travel experience has taught me!
சென்னையிலிருந்து பாரிஸ் நகரத்திற்கு விமானத்தில் சென்று கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக விமானம் ரோம் நகர விமான தளத்தில் தரை இறங்கியது, அதில் எனக்கு மட்டும் அங்கு ஒரு நாள் தங்குவதற்கும் ரோம் நகரத்திற்குள் செல்லவும் தற்கால அனுமதித் தாள் (Temporary visa)கொடுத்ததோடு, ரோம் நகர விமான தளத்தில் வேலை செய்யும் ஒரு அதிகாரி நான் தங்குவதற்கு வசதி
செய்துக் கொடுக்க தனது காரில் அழைத்துக் கொண்டு போனார். நான் அவருடன் பேசிக் கொண்டிருப்பதனை அவர் விரும்பியதால் 'விடுதிக்குப் பிறகு போகலாம் அதற்குள் ரோம் நகரத்தினை உங்களுக்கு காட்ட விரும்புகின்றேன்' எனக் கூறி தொடர்ந்தார் அப்பொழுது அவர் சொன்ன வார்த்தை என்னை மிகவும் கவர்ந்தது . நான் இந்தியா (பம்பாய் ,சென்னை) ,மலேசியா,சிலோன் மற்றும் பல நாடுகளில் எனது பணியை செய்துள்ளேன் ஆனால் சென்னை,மலேசியா மற்றும் சிலோன் நாடுகளில் பணி செய்த காலங்கள் எனக்கு மிகவும் மன நிறைவைத் தந்தது அதற்கு முக்கிய காரணம் நிறைவைத் தந்தது அதற்கு முக்கிய காரணம் அதிலும் முஸ்லிம்கள் மார்க்கத்தை பேணுவதில் மிகவும் அக்கறையுடன் இருப்பதுடன் குடும்ப உறவையும் சிறப்பாக அமைத்துக் கொள்கின்றார்கள்' என பெருமிதத்துடன் சொல்லி விட்டு மேலும் தொடர்ந்தார். ஆனால் அந்த குடும்ப வாழ்க்கையை அதிலும் கூட்டுக் குடும்ப வாழ்க்கையை
வளர்ந்த மேலை நாடுகளில் பார்க்க முடியாது.
அந்த நாடுகளில் ஒரு சில ஆண்டுகள் நாங்கள் வாழ்ந்தபோது எனக்கும் எனது மனைவிக்கும் இடையே
ஒரு பிடித்தம் உண்டாகியது' என்று மகிழ்வோடு சொன்னார். 'இதனை எனது மனைவி பலரிடம் சொல்லி பெருமையடைகின்றாள். அத்துடன் தனது வாரிசுகளுக்கு அந்த நாட்டிலிருந்துதான் திருமண தொடர்பு ஏற்படுத்திக் கொள்ளவும் விரும்புகின்றாள்' என அவர் சொன்னபோது
நான் ஒரு இஸ்லாமியனாகவும் மற்றும் இந்தியனாகவும் இருப்பதற்கு மிகவும் மகிழ்ந்து போனேன். என்னை இந்தியாவில் அதிலும் தமிழ்நாட்டில் பிறக்க வைத்தமைக்கும் இறைவனுக்கு நன்றி சொன்னேன்.
இந்த குடும்ப உறவின் நேசம் தொடர நாம் முயல்வோம்.
இன்னும் தொடரும் ...
"A journey of a thousand miles must begin with a single step." -- Lao Thu
"Travel and change of place impart new vigor to the mind." -- Seneca
S.E.A. முஹம்மது அலி ஜின்னா
Nidur.
Jazakkallahu Hairan நன்றி
முகம்மது அலி ஜின்னா
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: