இதுவா உன் ஆன்மீகம் ....!? /AI song /மஹா ஸ்ரீ சூரியக்கவிராயர் /UOM
Автор: UOM DEEKSHA
Загружено: 2026-01-23
Просмотров: 58
Описание:
காலாதீதம்
ஞான அதிர்வுப் பாடல் :
விருத்தம் :
புள்ளியாய்த் தொடர்ந்த காலப்
புதையலைத் தோண்ட ஆதிப்
பள்ளியின் வாசல் திறக்கும்
படித்ததில் ஒடுங்கா வண்ணம்
தள்ளியே நடக்கப் பழகும் (பழக்கும்)
தனியாண்மை ஒன்றே வரமாய்
உள்வைத்த காலாதீத
உதவிக்கு நன்றிகள் நவிலே ....!
1
இறந்திறந் திறந்தே உயிர்க்கும்
இயல்பினைத் தனதாய்க் கொண்டே
இறந்திட்ட காலச் சடங்கின்
ஏற்பாட்டு மரபுச் சுமையை
மறக்கவைத் துன்னை தன்போல்
மாற்றியே ஓங்க வைக்கும்
திறவுகோல் காலாதீதச்
செழுமைக்கு நன்றிகள் நவிலே ....!
2
பல்லவி :
இறந்தகாலப் பதிவுகள் சுமந்தே
மனதை பாரம் ஆக்கி வைத்தாய் ..,
எதிர்காலக் கற்பனை ஏந்தி
வாழ்க்கை முழுதும் ஏங்கி நின்றாய் ..,
நிகழ்காலப் புதையல் இழந்து
எதை எதையோ கடவுள் என்றாய் ..,
சாகும் மனிதன் பின் சென்றோடி
இறைவன் , தெய்வம் என்றிறந்தாய் ...!
இதுவா உன் ஆன்மீகம் ..!?
இதுவா உன் மெய்ஞ்ஞானம் ..!?
இதுவா உன் தீக் ஷைகள் ...!?
இதுவா உன் உபதேசம் ...!?
சரணம் -1-:
கால ஒழுக்கம் காட்டாத
தத்துவத்தை வேதம் என்றாய் ..,
செயல் ஒழுக்க நுட்பம் கற்கா
கல்விதனைப் பாடம் என்றாய் ..,
இயக்கமான ஆற்றல் ஒழுக்கம்
அறியாதவன் குருவென சொன்னாய் ..,
காலாதீத ஞான இருப்பை
உணராமல் பிறவி இழந்தாய் ..,
இதுவா உன் ஆன்மீகம் ..!?
இதுவா உன் மெய்ஞ்ஞானம் ..!?
இதுவா உன் தீக் ஷைகள் ..!?
இதுவா உன் உபதேசம் ..!?
சரணம் 2 :
இருப்பென்றால் என்னவென்று
உணராமல் சபை கண்டாய் ..,
காலம் எனும் பிரம்மாண்டத்தின்
கூர் ஏற்றா முனை ஒடித்தாய் ...,
யுகம் யுகமாய் யுக வேகத்தின்
நொடி அறியாக் கதை அளந்தாய் ...,
கூட்டம் சேர்த்து கோடிகள் சேர்த்து
சாபம் சேர்த்து மலமே உண்டாய் ...!
இதுவா உன் ஆன்மீகம் ...,!?
இதுவா உன் மெய்ஞ்ஞானம் ...!?
இதுவா உன் தீக் ஷைகள் ...!?
இதுவா உன் உபதேசம் ...!?
முடிப்பு :
காலம் காலம் காலாதீதம்
காட்டுவதே ஒளியின் மையம் ...!
காலம் காலம் காலாதீதம்
கற்பதுதான் ஜென்ம லாபம் ....!
காலம் காலம் காலாதீதம்
பிரம்மமான சத்-சித்-ஆனந்தம் ....!
காலம் காலம் காலாதீதம்
கடவுளான நிறைவின் இருப்பு ....!
நிறைவுடன் ...,
உலக ஒளி மையம்
ஞான சமஸ்தானம்
மஹா ஸ்ரீ சூரியக்கவிராயர்
கணேஷ் சுந்தரேசன்
9952014440
சகலமும் சித்தி பெறும் .
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: