செய்யும் தொழில் விருத்தி அடைய லாபம் பெருக வீட்டில் பண பற்றாக்குறை நீங்க வாழ்வில் உயர்ந்த நிலையை அடைய
Автор: Mantra to solve difficulties சங்கடம் தீர மந்திரம்
Загружено: 2022-08-02
Просмотров: 171
Описание:
விஷ்ணு காயத்ரி மந்திரம் 108 முறை
குபேர சம்பத்துக்களை எளிதில் பெற
இந்த உலகில் வாழும் ஜீவ ராசிகள் அனைத்தையும் காக்கும் கடவுளாக பாற்கடலில் பள்ளிகொண்டிருக்கிறார் பகவான் விஷ்ணு. அவருக்குரிய காயத்ரி மந்திரத்தை நாம் ஜெபிப்பதன் பலனாக நாம் செய்யும் தொழில் விருத்தி அடையும், லாபம் பெருகும், வீட்டில் பண பற்றாக்குறை நீங்கும் அதோடு வாழ்வில் உயர்ந்த நிலையை அடையலாம். இதோ அந்த அற்புதமான விஷ்ணு காயத்ரி மந்திரம்.
இந்த மந்திரத்தை தினம்தோறும் 108 முறை ஜெபிப்பதன் பலனாக நம் வாழ்வில் சகல செல்வங்களையும் பெற்று பெரு வாழ்வு வாழலாம்.
விஷ்ணு வழிபாடு
ஒரு மனிதன் தனது வாழ்வில் மிகுதியான செல்வங்களை ஈட்டவும், சுகபோகங்களை அனுபவிக்கும் நவகிரகங்களில் புதன் மற்றும் சுக்கிர பகவானின் அருட்கடாட்சம் முழுமையாக பெற வேண்டியிருக்கிறது. மகா விஷ்ணு எனப்படும் பெருமாள் இந்த இரண்டு கிரகங்களின் அம்சமாக விளங்குபவர் ஆவார். விஷ்ணு வழிபாடு செய்ய நினைப்பவர்கள் தங்கள் உடல், மனம், ஆன்மா ஆகிய மூன்றிலும் தூய்மை காத்து வழிபாடு செய்வதால் விரும்பிய பலன்களை அடைய முடியும். மேலும் பெருமாள் கோயில்களில் பெருமாளுக்கு துளசி மாலை சாற்றுவது, திருமஞ்சணம் செய்தல், வஸ்திரம் சாற்றுதல் போன்ற பரிகார வழிபாடுகள் செய்வதால் நமது வாழ்வில் மங்களங்கள் அனைத்தும் உண்டாகும் என்பதே ஆன்மீகப் பெரியோர்களின் வாக்காக இருக்கிறது.
விஷ்ணு வழிபாட்டிற்குரிய தினங்கள்
வருடத்தில் எல்லா தினங்களும் விஷ்ணு வழிபாட்டிற்குரிய தினங்களாக இருக்கிறது. ஆனபோதிலும் வாரந்தோறும் வருகின்ற புதன், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் வீட்டில் பெருமாளுக்கு வாசமிக்க மலர்கள் சாற்றி ஏதேனும் இனிப்பு உணவுகளை நைவேத்தியம் வைத்து, பெருமாள் மந்திரங்கள் துதித்து வழிபடுவது பலன்களை விரைவாக கொடுக்க வல்லதாகும். பௌர்ணமி தினங்களில் பெருமாளுக்கு அர்ச்சனை செய்து வழிபடுவது சிறப்பானதாகும். பெருமாளுக்கு விரதம் மற்றும் வழிபாடு செய்வதற்கு உகந்த மாதமாக புரட்டாசி மாதம் இருக்கிறது. இந்த புரட்டாசி மாதத்தில் பெருமாளுக்கு விரதமிருந்து வழிபாடு செய்பவர்களின் வாழ்வில் மேன்மையான பலன்கள் ஏற்படுவதை காணலாம். பொதுவாக பெருமாளுக்கு விரதமிருக்கும் போதும், பூஜைகள், வழிபாடுகள் செய்யும் போதும், பூஜை செய்பவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர்கள் புலால் உணவு, போதை வஸ்துக்களை அறவே தவிர்த்து விரதம் மேற்கொள்வது நல்லது.
விஷ்ணு வழிபாடு பலன்கள் விஷ்ணு செல்வத்திற்குரிய சுக்கிர பகவானின் அம்சம் நிறைந்தவர் என்பதால் பெருமாளுக்கு விரதங்கள் பூஜைகள் வழிபாடுகள் செய்பவர்களுக்கும், விஷ்ணு காயத்ரிமந்திரம் துதிப்பவர்களுக்கும் செல்வ சேர்க்கை உண்டாகும். தொழில், வியாபாரம் ஆகியவற்றில் நஷ்ட நிலை நீங்கி, லாபங்கள் பெருகும். சொந்த வீடு, வாகனம் போன்ற யோகங்கள் அமையும். வறுமை நிலையை நீங்கும். வாங்கிய கடன்களை திருப்பி செலுத்தும் அமைப்பு உருவாகும். வெளிநாடு சென்று செல்வம் சேர்க்கும் அதிர்ஷ்டம் உண்டாகும். நல்ல உணவு, புத்தாடைகள், வாசனை திரவியங்கள் போன்ற சுகபோக பொருட்களின் சேர்க்கை உண்டாகும். ஆண்களும், பெண்களும் மனதிற்கேற்ற வாழ்க்கை துணை அமைய பெறுவார்கள். வாழ்க்கைத் துணையால் தனலாபம் ஏற்படும் யோகமும் சிலருக்கு உண்டாகும்.
காயத்ரி மந்திரத்தை உச்சரிப்பவர்களுக்கு மனதிலும் உடலிலும் உற்சாகம் அதிகரிக்கும். நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். மனமும் சிந்தனையும் தெளிவடையும். இறைவனின் ஆசி கிடைக்கும்
நம் மனதில் நினைத்த காரியம் வெற்றி பெறவும், வாழ்க்கையில் சுகமும் சந்தோஷமும் கிடைக்கவும் தினந்தோறும் காயத்ரி மந்திரத்தினை உச்சரிக்கலாம். தினசரியும் காயத்ரி மந்திரத்தை உச்சரிப்பவர்களுக்கு அஷ்டமா சித்திகளும் கை கூடி வரும் சகல ஐஸ்வர்யங்களும் மன நிம்மதியும் கிடைக்கும் என்பதை பலரும் அனுபவப்பூர்வமாக உணர்ந்துள்ளனர். மற்ற எல்லா மந்திரங்களுக்கும் தாய் போன்றவள் காயத்ரி. காயத்ரி மந்திரத்திற்கு சாவித்ரி என்றும் சரஸ்வதி என்றும் பெயர்கள் உண்டு. இந்த மந்திரம் காலையில் காயத்ரிக்காகவும், நடுப்பகலில் சாவித்ரிக்காகவும், மாலை சந்தியா வந்தனத்தில் சரஸ்வதிக்காகவும் ஜபிக்கப்படுகிறது.
காயத்ரி மந்திரம் உச்சரிப்பதால் கிடைக்கும் நன்மைகள்
காயத்ரி மந்திரத்தை உச்சரிக்க அதிகாலை நேரம் சிறந்தது. இந்த மந்திரத்தை சூரிய உதயத்திற்கு சற்று முன்பு உச்சரிக்க வேண்டும். காலையில் கிழக்கு முகமாக சூரியனைப் பார்த்து நின்று கொண்டு இரு கைகளையும் முகத்திற்கு எதிராகக் கூப்பிக் கொண்டும், மதியம் கிழக்கு முகமாக உட்கார்ந்து கொண்டு கைகளை மார்புக்கு எதிரே கூப்பிக் கொண்டும், மாலையில் மேற்கு முகமாக அமர்ந்து கைகளை நாபிக்கு சமமாக கூப்பிக் கொண்டும் ஜபம் செய்ய வேண்டும்.
காயத்ரி மந்திரத்தை உச்சரிப்பவர்களுக்கு மனதிலும் உடலிலும் உற்சாகம் அதிகரிக்கும். நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். மனமும் சிந்தனையும் தெளிவடையும். இறைவனின் ஆசி கிடைக்கும். கோபம் நீங்கி மனம் அமைதியடையும்
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: