ஸ்ரீ நூரறொந்து சுவாமி மலை கோவில்
Автор: A.K.M.TAMIL
Загружено: 2025-12-15
Просмотров: 17
Описание:
ஸ்ரீ நூறொந்து சுவாமிகள் வாழ்க்கை வரலாறு ஒரு சிறு குறிப்பு
ஸ்ரீ நூறொந்து சுவாமிகள் வாழ்ந்த ஆண்டு சுமார் 800 வருடங்களுக்கு முன்பு. இவரின் உண்மையான பெயர் ஊர் அறியப்படவில்லை. ஸ்ரீ மலை மாதேஸ்வர சுவாமிகள் மற்றும் ஸ்ரீ இடையூர் சித்த லிங்கேஸ்வர சுவாமிகளின் சமகாலத்தவர். சுவாமிகள் வடகர்நாடகத்திலிருந்து வந்து, தற்போதுள்ள தமிழ்நாடு மற்றும் கர்நாடக எல்லைப்பகுதியான நூறொந்து மலையில் தவம் இயற்றத் தேர்ந்தெடுத்து சிலகாலம் இங்கு தங்கினார். அப்பொழுது அது அடர்ந்த வனப்பகுதி, மற்றும் மனிதர்களின் நடமாட்டம் அற்ற பகுதி. மிகச் சொற்ப மலைவாழ் மக்கள் இதன் சுற்றுப்பகுதியில் வாழ்ந்து வந்தனர். சுவாமிகள் மலைவாழ் மக்களை நன்னெறிப்படுத்தி, சனாதனத் தர்மத்தை போதித்து நெறிப்படுத்தினார். இவர் தவம் செய்வதற்கு ஒரு குகையைத் தேர்ந்தெடுத்து, தீபம் ஏற்ற வேரைத்திரியாக்கி குளத்தின் நீரைக் கொண்டு தீபம் ஏற்றினார். காலப்போக்கில் மக்கள் நடமாட்டம் அதிகரித்து அக்குளத்தில் கால்நடை மற்றும் மனிதர்கள் உபயோகித்ததால், அந்நீரை விளக்கு ஏற்றமுடியாத சூழ்நிலை ஏற்பட்டது. அச்சமயம் சுவாமிகள் ஒருமுடிவு செய்தார் மனிதர் தொடாத நீரைக் கொண்டு விளக்கு ஏற்றவேண்டும் என முடிவு செய்து, இளநீரில் தீபம் ஏற்ற ஆரம்பித்தார். இன்றளவும் அக்குகையில் இளநீரில் தீபம் ஏற்றப்பட்டு வழிபாடு தொடர்கிறது.
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: