ycliper

Популярное

Музыка Кино и Анимация Автомобили Животные Спорт Путешествия Игры Юмор

Интересные видео

2025 Сериалы Трейлеры Новости Как сделать Видеоуроки Diy своими руками

Топ запросов

смотреть а4 schoolboy runaway турецкий сериал смотреть мультфильмы эдисон
Скачать

ஆவுடையார் கோயில் ஆத்மநாதர் | இந்த தலத்தில் உள்ள சிற்பங்களின் சிறப்பு பாகம் 1 | Avudaiyar Koil

Автор: ஆன்மீகத்துடன் நட்பு

Загружено: 2023-08-20

Просмотров: 3856

Описание: ''திருப்பெருந்துறை ஆவுடையார் கோயில்!''
ஆத்மநாதர் ஆலயம்

ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலே எழுப்பப்பட்டது... இந்தக் கவிபாடும் கலைக் கூடம்!



'குதிரைகளை வாங்கிவருமாறு' தனது அமைச்சர்களில் வயதில் இளையவரான மாணிக்கவாசகருக்கு உத்தரவிடுகிறார் முதலாம் வரகுணபாண்டியன்.

வரகுணபாண்டியனின் கட்டளையை மறந்து சிவத்தொண்டில் ஈடுபடலானார் மாணிக்கவாசகர்.

தான் குதிரைகள் வாங்க கொண்டு வந்த 49 கோடி பொன்னை ஆவுடையார் கோவில் கட்டுவதிலும், சிவனடியார்களுக்கும் செலவிட்டார்.

🌿

இந்தக் கோயிலில், மற்ற சிவாலயங்களில் இருப்பது போல...

கொடிமரம், இல்லை!
பலி பீடமும் இல்லை!
நந்தியும் இல்லை!
சுவாமிக்கு உருவமும் இல்லை!
இங்கு பிரதோஷம் கிடையாது!
ஆவுடையாருக்கு மட்டுமே அபிஷேகம்!

இங்கு வருகின்ற பக்தர்களுக்கு மற்ற கோயில்களைப் போல தீப ஆராதனையினைத் தொட்டு வணங்க அனுமதிப்பதும் இல்லை! மாணிக்கவாசகர் ஜோதியிலே கலந்துள்ளார் என்பதாலேயே தீபம் தருவதில்லை.

கருவறையில் அரூபமாக உள்ள மூலவர் 'அருள்மிகு ஆத்மநாத'ருக்குப் பதிலாக, உற்சவமூர்த்தியாக.... 'சிவானந்த மாணிக்கவாசகர்'தான் ரிஷப வாகனத்திலும், தேரிலும்... வீதி உலா வருகிறார்!

இங்கே இறைவன் அருவமாக இருக்கிறார்! அதனை உணர்ந்த மனிதன் இங்கே தெய்வமாகக் காட்சியளிக்கிறார்!


🌿

இங்கேயுள்ள அம்பாளைக் காண்பதற்கு அம்பாள் சந்நிதியில் 36 துவாரங்கள் உள்ளன. அந்தத் துவாரங்கள் வழியே நம் பார்வையைச் செலுத்தினால், உள்ளே இருப்பது ஒன்றும் நமக்குத் தெரியாது.

ஆனால், ஒரு துவாரத்தில் நம் இரண்டு கண்களையும் செலுத்தினால், உள்ளே இருக்கும் அம்பாளின் பாதத்தைக் காணலாம்.



🌿

''ஆவுடையார் கோயிலை பூதம்தான் கட்டிற்று!'' என்பது இவ்வட்டார மக்களின் நம்பிக்கை. காரணம், மனிதர்களால் கனவிலும் கட்டமுடியாத வண்ணம் கட்டப்பட்டிருப்பதால்!

சுற்று வட்டாரத்தில் மலைகளே இல்லாதபோது சுமார் 1100 ஆண்டுகளுக்கு முன்னால் பாதைப் போக்குவரத்துக்களே இல்லாத காலத்தில் வெறும் பாறைகளைக் கொண்டே பல கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த ஆலயம் கட்டப்பட்டுள்ளது என்பது பிரமிப்பு மிக்கது.

பெரிய பாறைகளைக் கொண்டு வந்து தூண்கள் அமைத்தும் சிலைகள் வடித்தும் கொடுங்கைக் கூரைகள் இணைத்தும் மதில் சுவர்கள் கோபுரங்கள் எழுப்பியும் வைக்கப்பட்டுள்ளது!

🌿

ஒரு வீட்டிற்கு தாழ்வாரம் அமைக்கும்போது பனைமரம் அல்லது தேக்கு மரத்திலோ பக்கவாட்டுக் கைகள் அமைத்து அதனை இரும்புக் கம்பிகளால் இணைத்து அதன் மீது குறுக்குச் சட்டங்கள் இணைத்து அதன்மீது ஒடு வேய்வது வழக்கம்.

இதே போல கோயிலின் தாழ்வாரத்திலுள்ள கொடுங்கைகள் இழைத்துக் காட்டிக் கல்லைக் கவிதை பாட வைத்துள்ளார்கள்!

தேக்கு மரச்சட்டம் போல் இழைத்து அதிலே குறுக்கக் கம்பிகளும் நான்கு பட்டைகம்பிகளும் ஆறு பட்டைக் கம்பிகளும் உருண்டைக் கம்பிகளும் இணைத்துச் சேர்த்து அதிலே குமிழ் ஆணிப்பட்டை ஆணிகள் அறைந்திருப்பது போல... எல்லாமே கல்லில் செய்து, அதன் மீது மெல்லிய ஓடு வேய்ந்திருப்பது போல செய்திருப்பது... 🤔

சிற்பக்கலை என்றால் என்னவென்று அறியாதவர்கள் கூட வியக்கத் தக்க ஒப்பற்ற திறனாகும்.

'ஒரு கல்லுக்கும் மறு கல்லுக்கும் எப்படி எந்த இடத்தில் இணை சேர்க்கப்பட்டுள்ளது?!' என்பதைக் கண்டு பிடிக்க முடியாத அளவிற்கு அமைக்கப்பட்டுள்ள தாழ்வாரம் எனப்படும் 'கொடுங்கைக்கூரை' ஆனது மொத்தம் பதிமூன்றரை அடி நீளமும் ஐந்தடி அகலமும் இரண்டரையடி கனமும் உள்ளதாகும்.

இந்த இரண்டரையடி கனத்தை இப்படி தாழ்வாரக் கூரையாக்கி செதுக்கிச் செதுக்கி ஒரு அங்குல கன்னமுள்ள மேலோடு அளவிற்குச் சன்னமாக்கப்பட்டிருக்கிறது.

மேலும் இதே மண்டபத்தில் 10-15 வளையங்கள் கொண்ட ஒரே கல்லிலான கற்சங்கிலி செதுக்கப்பட்டு உயரத்தில் பொறுத்தித் தொங்க விடப்பட்டுள்ளது. இந்த மண்டபத்தின் அருகே இசைத்தூண்கள் உள்ளன இவற்றை தட்டினால் இசை எழுவது வியப்பு!


இங்குள்ள எல்லா உருவச்சிலைகளிலேயும் காலில் உள்ள நரம்பு கூட வெளியே தெரிகின்றன. சிலைகளின் தலைமுடி கூட சன்னமாக அளந்து நீவி விடப்பட்டுள்ளன.

தற்கால நவநாகரீக நகைகள் அனைத்தும் 1000 ஆண்டுகளுக்கு முன்னமேயே இங்குள்ள சிலைகளிலே வழங்கப்பட்டுள்ளதை இன்றும் காணலாம்!

நரியைப் பரியாக்கியது இத்தல புராணத்தின் பெருமையாகும். இந்த ஆவுடையார் கோயிலிலே 'தாவும்பரி' என்று ஒரு குதிரை கல்லில் செதுக்கப்பட்டுள்ளது. அந்தக் குதிரை மீது சிவபெருமான் அமர்ந்து வருவது போல செய்யப்பட்டுள்ளது.

ஆத்மநாதருக்கு ஆறு காலங்களிலும் புழுங்கலரிசி நிவேதனம், ஒரு தவலையில் வடித்து, கைபடாமல் அப்பாத்திரத்தோடு கொண்டுவந்து அமுத மண்டபத்தில் உள்ள கருங்கல் மேடையில் (சுவாமிக்கு எதிரில்) அப்படியே கொட்டி, ஆவியோடு சுவாமிக்கு நிவேதிப்பதை நாமும் பார்க்கலாம்.

அர்த்த சாமத்தில் தினமும் சுவாமிக்கு புளியோதரை, எள் சாதம், பால் சாதம், உளுந்து சாதம், பாகற்காய், முளைக்கீரை நிவேதனம் நிவேதிக்கப்படுகின்றன.


இத்தலத்தில் காணவேண்டிய அபூர்வ சிற்பங்கள் (உலகப்புகழ்பெற்றவை)

1. டுண்டி விநாயகர் சிற்ப உருவம்

2. உடும்பும் குரங்கும்

3. கற்சங்கிலிகள் - சங்கிலியின் நுனியில் பாம்பு ஒன்று பின்னிக்கொண்டு தலையினைக் காட்டுவது

4. இரண்டே தூண்களில் ஓராயிரம் கால்கள்

5. 1008 சிவாலயங்களில் உள்ள இறைவன் இறைவியர் திருவுருவங்கள்

6. பலநாட்டுக் குதிரைச் சிற்பங்கள்

7. 27 நட்சத்திர உருவச் சிற்பங்கள்

8. நடனக்கலை முத்திரை பேதங்கள்

9. சப்தஸ்வரக் கற்தூண்கள்

10. கூடல்வாய் நிழல் விழும் பகுதி பசுமாட்டின் கழுத்து போன்று காணப்படுதல்.

ஆவுடையார் கோவில் என்னும் திருப்பெருந்துறை,
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் இருந்து சுமார் 14 கி.மீ. தொலைவில் உள்ளது.

தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்

+91 91598 54014
+91 7994347966


if you want to support us via UPI id

9655896987@ibl

Join this channel to get access to perks:

   / @mathina  

தமிழ்

Не удается загрузить Youtube-плеер. Проверьте блокировку Youtube в вашей сети.
Повторяем попытку...
ஆவுடையார் கோயில் ஆத்மநாதர் | இந்த தலத்தில் உள்ள சிற்பங்களின் சிறப்பு பாகம் 1 | Avudaiyar Koil

Поделиться в:

Доступные форматы для скачивания:

Скачать видео

  • Информация по загрузке:

Скачать аудио

Похожие видео

© 2025 ycliper. Все права защищены.



  • Контакты
  • О нас
  • Политика конфиденциальности



Контакты для правообладателей: [email protected]