ஆரோக்கியத்திற்கு மஞ்சள் தானம்!
Автор: Aanmeegam Shorts
Загружено: 2025-05-02
Просмотров: 73
Описание:
ஆரோக்கியத்திற்கு மஞ்சள் தானம்!#
நன்றாக இருந்த வீட்டில் திடீரென ஒருவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போகும். அதனைத் தொடர்ந்து அடுத்தடுத்த நபர்களுக்கும் ஏதாவது ஒரு உடல்நல கோளாறுகள் ஏற்பட்டு மருத்துவ செலவுகள் செய்ய வேண்டி இருக்கும். இப்படி தொடர்ந்து குடும்பத்தில் ஒருவரை மாற்றி ஒருவர் உடல்நலம் சரியில்லாமல் போனால் செய்ய வேண்டிய தானம் என்ன? என்னும் ஆன்மீகம் சார்ந்த தகவலை தொடர்ந்து காண்போம் வாருங்கள். அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போவதற்கு கண் திருஷ்டியும் ஒரு காரணம். பொல்லாத இந்த திருஷ்டிகள் வீட்டில் இருப்பவர்களை இப்படி முடக்கி போட்டு விடும். மாற்றாக பஞ்சபூதங்களாலும் இப்படி நடக்கலாம். நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய ஐம்பெரும் பூதங்கள் இன்றி இந்த பிரபஞ்சம் முழுமை பெறாது. இவற்றின் மூலமும் ஏதாவது ஒரு வகையில் நாம் நோய்வாய்ப்பட்டு விடுகிறோம். - Advertisement - தன்வந்திரி பகவான் மந்திரம்: ஓம் நமோ பகவதே, வாஸுதேவாய.. தன்வந்தரயே! அம்ருத கலச ஹஸ்தாய! ஸர்வ ஆமய விநாசநாய த்ரைலோக்ய, நாதாய் ஸ்ரீ மகாவிஷ்ணவே நம!!! நோய்களை தீர்ப்பவர் தன்வந்திரி பகவான். தன்வந்திரி மந்திரம் உச்சரிப்பவர்களுக்கு நோய்களிலிருந்து நிவாரணம் கிடைக்கும். அடிக்கடி உடல் நலம் கோளாறுகள் தொடர்ந்து வீட்டில் ஏற்பட்டால் உடனே அருகில் இருக்கும் கோவிலுக்கு செல்லுங்கள். கோவிலுக்கு முழு மஞ்சளை தானம் செய்யுங்கள். முழு மஞ்சள் கிழங்குகளை தானம் செய்தால் பிணி தீரும் என்பது நம்பிக்கை. - Advertisement - நோய்களிலிருந்து நிவாரணம் பெற தன்வந்திரி பகவான் வழிபாட்டையும், அவரின் மந்திரத்தையும் உச்சரியுங்கள். நோய்கள் முழுமையாக தீர்வதற்கு முழு மஞ்சளை எந்த கோவிலுக்கும் தானம் செய்யுங்கள். இந்த கோவில் தான் என்று இல்லாமல், எந்த கோவிலுக்கும் முழு மஞ்சளை தானம் செய்ய, சகல விதமான பிணிகளும் தீரும் என்பது ஐதீகம். சிறிதளவு மஞ்சளை நீரில் கரைத்து வீட்டை சுற்றிலும் தெளித்து வாருங்கள். மஞ்சள் கிருமி நாசினி என்பது அனைவருக்கும் தெரிந்ததே, மஞ்சள் தீய சக்திகளை நம்மிடம் நெருங்க வைக்காமல் காக்கும் மூலிகையும் ஆகும். தினமும் மஞ்சள் கலந்த பாலுடன், மிளகையும் சேர்த்து குடித்து வாருங்கள். சிறு சிறு உடல் உபாதைகள் அடிக்கடி வராமல் பாதுகாக்கலாம். குடிக்கும் தண்ணீரில் சிட்டிகை அளவு மஞ்சளுடன், சிறிதளவு சீரகத்தையும் சேர்த்து ஊற வைத்து குடியுங்கள். அது மட்டும் அல்லாமல் மஞ்சள் பூசணிக்காயையும் தானம் செய்தால் நோய்வாய்ப்படாமல் குடும்ப நபர்கள் ஆரோக்கியமாக இருப்பார்கள். வீட்டில் எத்தனை நபர்கள் இருக்கிறார்களோ, அத்தனை நபர்களுக்கான எண்ணிக்கையில் பூசணிக்காய்களை தானம் செய்ய வேண்டும். மூன்று பேர் இருக்கும் வீட்டில் மூன்று மஞ்சள் பூசணிக்காய்களையும், நான்கு பேர் இருக்கும் வீட்டில் 4 பூசணிக்காய்களையும் மற்றவர்களுக்கு கோவிலில் வைத்து தானம் செய்யலாம். இப்படி மஞ்சளையும், மஞ்சள் பூசணிக்காயையும் தானம் செய்து வந்தால் குடும்பத்தில் அடிக்கடி உடல் நலக் கோளாறுகளால் பாதிக்கப்படாமல் தவிர்க்கலாம். இதையும் படிக்கலாமே: மேலும் சுத்தமான நீர், சுத்தமான காற்று, உண்ணும் உணவும், சுற்றுப்புறமும் சுத்தமாக இருப்பது போன்ற விஷயங்களையும் கருத்தில் கொள்ள வேண்டும். மாறிவரும் உணவு முறை பழக்கத்தினால் இப்போதெல்லாம் அடிக்கடி ஏதாவது உடம்புக்கு வந்து விடுகிறது. மனிதன் இயந்திரமாக மாறி இயந்திர வாழ்க்கையை, இயந்திரத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கிறான். இதிலிருந்து வெளியில் வந்து நம் ஆரோக்கியத்திற்கும், குடும்பத்தில் இருக்கும் நபர்களின் ஆரோக்கியத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்தால் மட்டுமே, நம் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும்.!#
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: