Unique Words
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ .( அல்ஹம்துலில்லாஹ் ). நாம் அனைவரும் குர்ஆன் ஓதுகிறோம். ஆனால் அதன் பொருள் என்ன என்று தெரியாமல் அரபியில் மட்டும் ஓதுகிறோம் . பொருள் தெரிந்தால் மட்டுமே இறைவேதமான திருக்குர்ஆன் வாயிலாக ஏக இறைவன் கூறிய வாழ்வியல் நெறிமுறைகளையும், ஒழுக்க நெறிகளையும், சட்ட திட்டங்களையும் விளங்கிக் கொள்ள முடியும் . எனவே நான் எனது சிறிய முயற்சியாக இந்த சேனலில் திருக்குர்ஆன் வசனங்களை தமிழில் பதிவிடுகிறேன். எனது இந்த பதிவுகள் மூலம் யாரேனும் ஒருவரது வாழ்க்கையிலாவது திருக்குர்ஆன் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையில்...........இன்ஷாஅல்லாஹ்!
யா அல்லாஹ்! உன்னையே வணங்குகிகிறோம், உன்னிடமே உதவியும் தேடுகிறோம்.
எங்கள் பாவங்களை மன்னிப்பாயாக! ஆமின்.