தனிவழிக்குத் துணை

நெஞ்சக் கனகல்லும்நெகிழ்ந்துருக
தஞ்சத்தருள் சண்முகனுக்கியல் சேர்
செஞ்சொல்புனை மாலை
சிறந்திடவே
பஞ்சக் கர யானை பதம் பணிவாம்
திருவடி போற்றி


உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உருவாய் கதியாய்
விதியாய்
குருவால் வருவாய் அருள்வாய் குகனே

ஸ்ரீ அருணகிரிப் பெருமான்
திருவடி போற்றி!!!

ஆறிருந் தடந்தோள் வாழ்க
அறுமுகம் வாழ்க
வெற்பைக் கூறுசெய் தனிவேல் வாழ்க
குக்குடம் வாழ்க
செவ்வேள் ஏறிய
மஞ்ஞை வாழ்க
யானைதன் அணங்கு வாழ்க
மாறிலா வள்ளி வாழ்க
வாழ்க சீர் அடியார் எல்லாம் 🙏🙏🙏

AI POWERED MUSIC
THIRUPUGAZH ISAI

குகன் உள்ளிருந்து இயக்கியவாறு....