Sabeshan Balasingam
நான் இந்துவாக பிறந்து கிறிஸ்தவனாக மாறி இருந்திருந்தாலும் கூட எனக்குள் சரியான சத்தியம் அல்லது வேதாகமத்தின் வெளிச்சம் எனக்குள் இருந்ததில்லை. ஒரு நாள் நான் கிறிஸ்துவின் கிருபையின் சுவிஷேசத்தை பெற்று, பெற்ற அன்றிலிருந்து கிறிஸ்துவின் புதிய உடன்படிக்கையாகிய கிருபையின் சுவிஷேசத்தை பிரசங்கித்து வருகிறேன். இந்த இணைய தளத்தில் நீங்கள் கேட்பவைகள் யாவும் கலப்படமில்லாத, அதாவது நிதானமாய் பகுத்து அறிந்து போதிக்கப்படுகிறது. கிறிஸ்துவால் நித்தியஜீவனை பெற்ற நாம் இந்த பூமியிலேயே கிறிஸ்துவோடு ஒரே ஆவியாக அவருக்குள் உறவாக இருக்கிறோம் என்கிற உண்மை அநேகருக்கு தெரியாது. ஆதலால் ஒருவர், சபைக்கு போனால் காணும், மற்றும் கிறிஸ்தவனாக இருந்தால் காணும் என நினைக்காமல் சத்தியத்தையும், அல்லது வேதாகமத்தில் எழுதப்பட்ட சில வசனங்களின் அர்த்தம் தெரியாததால் வரும் கட்டுக்களை நீங்களே உடைக்கவேணுமானால் இது உங்களுக்கு சரியான தளம். இப்படிக்கு உங்கள் Sabeshan