Seed Island விதைத் தீவு

தற்சார்பு வாழ்வியலுக்கு வீட்டு தோட்டம் முக்கிய பங்கு வகிக்கிறது. எந்தவித பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் பல வருடங்களாக கிடைத்த அனுபவங்களின் அடிப்படையில் சமூக வலைதளங்களிலும் நாங்கள் கற்று கொடுக்கிறோம். கடல் கடந்து வாழும் பலர் பயனடையவே இந்த விதை தீவு. சேகரித்த பல மரபு ரக விதைகளை வீட்டு தோட்டத்திலே பல மடங்கு பெருக்கி பரவலாக்குவது, நம்மை சுற்றி கிடைக்கும் எளிய பொருள்களை கொண்டு வைத்த அருமையாக வீட்டு தோட்டம் எளிய முறையில் அமைக்கும் முறை, எளிய முறையில் பூச்சி விரட்டிகள் மற்றும் வளர்ச்சி ஊக்கிகள் தயாரித்து பயன்படுத்தும் முறை, பல மரபு ரக காய்கறிகளை பற்றிய சுவாரசியமான தகவல்கள் அனைத்தையும் விதை தீவில் பெற்று பயனடையலாம். தற்சார்பு வாழ்கைகக்கான பயணமாக இந்த விதை தீவு அமையும். விதை தீவின் பதிவுகள் அனைத்தும் நாங்கள் பல வருடங்களாக பெற்ற அனுபவ பதிவுகளாகும்.
இப்படிக்கு
விதை தீவின் படைப்பாளர்கள்
மானேரி பலராமன் மற்றும் பிரியா ராஜ்நாராயணன்

https://www.newindianexpress.com/cities/chennai/2021/feb/22/seeding-revival-sentiment-2267035.html